Connect with us

எனது சிறுவயது நினைவுகளை மீண்டும் எனக்குள் கொண்டுவந்த படம் – மெய்யழகன் படக்குழுவை பாராட்டிய அன்புமணி ராமதாஸ்..!!

Cinema News

எனது சிறுவயது நினைவுகளை மீண்டும் எனக்குள் கொண்டுவந்த படம் – மெய்யழகன் படக்குழுவை பாராட்டிய அன்புமணி ராமதாஸ்..!!

கார்த்தி மற்றும் அரவிந்த் சாமி நடிப்பில் உருவாகி மாபெரும் வெற்றியை ருசித்த மெய்யழகன் படத்தையும் படக்குழுவையும் பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் மனதார பாராட்டி உள்ளார்.

பிரேம்குமார் இயக்கத்தில் கார்த்தி , அரவிந்த் சாமி , தேவ தர்ஷினி , ஸ்ரீதிவ்யா , ராஜ்கிரண் உள்ளிய பல முன்னணி நட்சத்திரங்களில் நடிப்பில் உருவாகி கடந்த செப்டம்பர் மாதம் திரையரங்குகளில் வெளியான திரைப்படமே மெய்யழகன்.

இப்படம் வெளியான நாள் முதல் நல்ல பல விமர்சனங்களை பெற்ற நிலையில் அண்மையில் மெய்யழகன் திரைப்படம் ஓடிடி தளத்தில் வெளியாகி பல உச்ச நட்சத்திரங்களின் பாராட்டை பெற்று வருகிறது.

அந்தவகையில் இப்படத்தை பார்த்த பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் படத்தையும் படக்குழுவையும் மனதார பாராட்டி உள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறிருப்பதாவது :

ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ள மெய்யழகன் திரைப்படத்தை தீபஒளி நாளில் கண்டு மகிழ்ந்தேன். முன்னோர் வழி, வம்சாவளி, கிராமத்து கல்யாண விருந்து, காளை, பாம்பு, பல்லியுடன் இணைந்த வாழ்க்கை, குடும்பத்தில் 4 பேர் மட்டுமே இருந்தாலும் கூட, பெரிய தாத்தா, சின்ன தாத்தா, அவர்களின் வகையறா என உறவுமுறைகளை இன்றைய இளம் தலைமுறைக்கு எடுத்துக்கூறும் சிறந்த படம்.

எனது சிறுவயது கிராமத்து நினைவுகளை மீண்டும் முழுமையாக எனக்குள் கொண்டுவந்த படம். நடிகர்கள் கார்த்தி, அரவிந்த் சாமி ஆகியோர் அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர். இயக்குநர் சி.பிரேம்குமார் பார்வையாளர்களை உறவுக்கூட்டுக்குள் அழைத்துச் சென்றுள்ளார். Really felt good watching this feel good movie. என அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  மத்திய பாதுகாப்புதுறை அமைச்சரை சந்தித்த அமரன் படக்குழு - காரணம் என்ன தெரியுமா..?

More in Cinema News

To Top