Connect with us

மீண்டும் இணைந்த ‘அன்பே ஆருயிரே’ கூட்டணி – ‘கில்லர்’ படத்தின் இசையமைப்பாளர் Update..

Featured

மீண்டும் இணைந்த ‘அன்பே ஆருயிரே’ கூட்டணி – ‘கில்லர்’ படத்தின் இசையமைப்பாளர் Update..

இசை திரைப்படத்திற்குப் பிறகு, தமிழ் சினிமாவில் மிகவும் பிஸியாக நடித்துவரும் எஸ்.ஜே. சூர்யா, தற்போது பத்தாண்டுகள் கழித்து மீண்டும் இயக்குநராக களமிறங்கியுள்ளார்.

‘கில்லர்’ எனும் தலைப்பில் இந்த படம் உருவாகவுள்ளது. இப்படத்தை ஸ்ரீ கோகுலம் மூவிஸ் நிறுவனம் தயாரிக்கிறது. ‘அயோத்தி’ திரைப்படத்தில் நடித்துப் பாராட்டைப் பெற்ற நடிகை ப்ரீத்தி அஸ்ரனி, இந்த படத்தின் கதாநாயகியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். படத்தின் பூஜை சமீபத்தில் நடைபெற்றது. ஆனால், இசையமைப்பாளர் யார் என்ற விவரத்தை தயாரிப்பாளர் தரப்பில் இருந்து உடனடியாக வெளியிடவில்லை. இது குறித்து வரும் ஜூலை 7ம் தேதி அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என ஏற்கனவே எஸ்.ஜே. சூர்யா தெரிவித்திருந்தார்.

அதன்படி, இன்று வெளியான அறிவிப்பில், ‘கில்லர்’ திரைப்படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான் இசையமைக்கிறார் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. ‘அன்பே ஆருயிரே’ திரைப்படத்திற்கு பிறகு, எஸ்.ஜே. சூர்யா இயக்கும் படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைக்கிறார் என்பதும், இது ரசிகர்களுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சியைக் கொடுத்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Featured

Advertisement
 

Trending

 
Advertisement
To Top