Connect with us

மிக்ஜாம் புயல் காரணமாக ஒத்திவைக்கப்பட்ட சென்னைப் பல்கலைக்கழக தேர்வுகளுக்கான மாற்றுத் தேதி அறிவிப்பு..!!

Featured

மிக்ஜாம் புயல் காரணமாக ஒத்திவைக்கப்பட்ட சென்னைப் பல்கலைக்கழக தேர்வுகளுக்கான மாற்றுத் தேதி அறிவிப்பு..!!

மிக்ஜாம் புயல் காரணமாக ஒத்திவைக்கப்பட்ட சென்னைப் பல்கலைக்கழக தேர்வுகளுக்கான மாற்றுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

மிக்ஜாம் புயலால் ஏற்பட்ட கனமழை மற்றும் வெள்ளத்தால் சென்னை மற்றும் அதனை சுற்றுலா பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது . இதனால் பொதுமக்களின் பாதுகாப்பு கருதி மின்சாரம் துண்டிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது படிப்படியாக மின் விநியோகம் நடைபெற்று வருவதாக அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் மிக்ஜாம் புயல் ஏற்படுத்திய தாக்கத்தால் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு தொடர் விடுமுறை அறிவிக்கப்பட்டதுடன் பள்ளிகளுக்கான அரையாண்டு தேர்வுகள் மற்றும் கல்லூரிகளுக்கான செமஸ்டர் தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டது .

இந்நிலையில் சென்னைப் பல்கலைக்கழககம் சார்பில் ஒத்திவைக்கப்பட்ட செமஸ்டர் தேர்வுகளுக்கான மாற்றுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி 04.12.2023 முதல் 09.12.2023 வரை நடைபெறவிருந்த சென்னைப் பல்கலைக்கழக செமஸ்டர் தேர்வுகள் வரும் 11.12.2023 முதல் 16.12.2023 வரை நடைபெறும் என்றும் மேலும் விவரங்களுக்கு www.unom.ac.in என்ற இணையதளத்தை சென்று பார்க்கவும் சென்னைப் பல்கலைக்கழககம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Featured

To Top