Connect with us

தாமதமாகும் விடுதலை 2 படப்பிடிப்பு..!! ஒருவேளை வடசென்னை பார்ட் 2 மாறி ஆகிருமோ..

Cinema News

தாமதமாகும் விடுதலை 2 படப்பிடிப்பு..!! ஒருவேளை வடசென்னை பார்ட் 2 மாறி ஆகிருமோ..

விடுதலை 2 படத்தின் படப்பிடிப்பு தொடர்ந்து தாமதமாகி வருவதால் வடசென்னை பார்ட் 2 மாறி ஆகி விடுமோ என ரசிகர்கள் பெரும் வருத்தத்தில் உள்ளனர்.

எழுத்தாளர் ஜெகன்மோகனின் ‘துணைவன்’ என்ற சிறுகதையை அடிப்படையாக வைத்து வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியான படம் தான் விடுதலை. பொதுவாக புரட்சிகரமான கதைகளுக்கு பெயர்போன இயக்குனராக வலம் வரும் வெற்றிமாறன் இப்படத்தை சூரியை கதாநாயகனாக வைத்து எடுத்துள்ளார்.

சூரி மற்றும் விஜய் சேதுபதியின் அசத்தலான நடிப்பில் திரையரங்குகளில் வெளியான இப்படம் ரசிகர்களின் அமோக வரவேற்பை பெற்றது . இந்நிலையில் இப்படம் இருபாகங்களாக வெளியாகும் என முன்னரே அறிவிக்கப்பட்ட நிலையில் விடுதலை 2 படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என அறிவிக்கப்பட்டது .ஆனால் தற்போது வரை இந்த படம் குறித்த எந்த ஒரு அறிவிப்பும் வெளியாகவில்லை.

இந்நிலையில், முதல் பாகம் முழுவதும் சிறுமலையில் எடுக்கப்பட்ட நிலையில் 2 ஆம் பாகமும் அங்கேயே எடுக்க திட்டமிட்டுள்ளதாகவும் சிறுமலையில் தற்போது பனிப்பொழிவு அதிகமாக இருப்பதால் இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பில் தாமதம் ஏற்பட்டுள்ளதாகவும் திரைத்துறை வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  டெல்லியின் ரன்குவிப்பை தடுக்குமா கொல்கத்தா..? டாஸ் வென்ற டெல்லி அணி பேட்டிங் செய்ய முடிவு..!!!

More in Cinema News

To Top