Connect with us

“ரஷ்மிகா என் மகளைப் போல” – சின்மயி உருக்கமான கருத்து

Cinema News

“ரஷ்மிகா என் மகளைப் போல” – சின்மயி உருக்கமான கருத்து

நடிகை ரஷ்மிகா மந்தன்னாவைப் பற்றி பாடகி சின்மயி ஸ்ரீபாதா பகிர்ந்த கருத்து தற்போது சமூக வலைதளங்களில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது. சமீபத்தில் ஒரு பேட்டியில் பேசிய சின்மயி, ரஷ்மிகா இந்திய சினிமாவில் மிகுந்த திறமை கொண்ட நடிகைகளில் ஒருவராக இருப்பதாகவும், தனது தொழிலில் மிகவும் கடினமாக உழைக்கும் கலைஞர் என்றும் பாராட்டினார். குறிப்பாக தனது கணவர் ராகுல் ரவீந்திரன் இயக்கிய The Girlfriend படத்தில் ரஷ்மிகா நடித்த விதம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றதாகவும் அவர் கூறினார்.

வயது வித்தியாசம் அதிகமாக இல்லாவிட்டாலும், ராகுல் ரவீந்திரன் ரஷ்மிகாவுக்கு தந்தை போன்றவர் எனவும், அதனால் தான் தானும் ரஷ்மிகாவை தனது மகளைப் போலவே நினைக்கிறேன் என்றும் சின்மயி மனம் திறந்து தெரிவித்தார். ரஷ்மிகா மிகவும் இனிமையான குணம் கொண்டவர் என்றும், அவளைப் போன்ற மகளை பெற்றது போல தான் மகிழ்ச்சியடைகிறேன் என்றும் அவர் உருக்கமாக கூறியுள்ளார். சின்மயியின் இந்த அன்பான கருத்து தற்போது ரசிகர்களிடையே பரவலாக பேசப்பட்டு, சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Cinema News

Advertisement
 

Trending

 
Advertisement
To Top