Connect with us

எதிர்பாராததை எதிர்பாருங்கள் – ‘அஜித் குமார் ரேஸிங்’ என்ற கார் பந்தய அணியை தொடங்கிய AK..!!

Cinema News

எதிர்பாராததை எதிர்பாருங்கள் – ‘அஜித் குமார் ரேஸிங்’ என்ற கார் பந்தய அணியை தொடங்கிய AK..!!

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் நடிகர் அஜித் குமார் ‘அஜித் குமார் ரேஸிங்’ என்ற கார் பந்தய அணியை தொடங்கி உள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகி உள்ளது.

தமிழ் சினிமாவில் அதிக ரசிகர்களை கொண்ட நடிகராக வலம் வரும் நடிகர் அஜித் குமார் தொடர்ந்து பல படங்களில் நடித்து வருகிறார். இவரது நடிப்பில் தற்போது விடாமுயற்சி , குட் பேட் அக்லி உள்ளிட்ட திரைப்படங்கள் உருவாகி வருகிறது.

சினிமாவில் நடிப்பதை தாண்டி கார் மற்றும் பைக் ரேஸிங் மீது அதீத ஆர்வம் கொண்ட நடிகர் அஜித் சமீப காலமாக கார் ரேஸிங் பயிற்சி எடுத்து வருகிறார் . இதனால் அவர் மீண்டும் கார் ரேஸில் ஈடுபட போகிறார் என அனைவரும் ஆவலாக காத்திருந்த நேரத்தில் தற்போது தாறுமாறான அறிவிப்பு ஒன்று வெளியாகி உள்ளது.

‘அஜித் குமார் ரேஸிங்’ என்ற புதிய கார் பந்தய அணியை நடிகர் அஜித்குமார் தொடங்கியுள்ளதாக அவரது மேலாளர் சுரேஷ் சந்த்ரா அறிவித்துள்ளார் .

பெல்ஜியம் நாட்டைச் சேர்ந்த ஃபேபியன் டஃபியூ என்பவர் இந்த அணியின் அதிகாரப்பூர்வ ரேஸிங் ஓட்டுநராக செயல்படுவார் எனவும், ஐரோப்பியாவில் நடைபெறும் 24H கார் பந்தயத்தில் போர்ஷே 992 GT3 கப் பிரிவில் ‘அஜித் குமார் ரேஸிங்’ அணி பங்கேற்கும் எனவும் அவர் கூறியுள்ளார்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  ஜீவா நடிப்பில் உருவான பிளாக் படத்தின் ரிலீஸ் தேதியை வெளியிட்டது படக்குழு..!!

More in Cinema News

To Top