Connect with us

த்ரில்லர் கதைக்களத்தில் ஐஸ்வர்யா ராஜேஷின் புதிய படம் – பூஜை போட்டு தொடங்கி வைத்த மக்கள் செல்வன்..!!

Cinema News

த்ரில்லர் கதைக்களத்தில் ஐஸ்வர்யா ராஜேஷின் புதிய படம் – பூஜை போட்டு தொடங்கி வைத்த மக்கள் செல்வன்..!!

த்ரில்லர் கதைக்களத்தில் உருவாகும் ஐஸ்வர்யா ராஜேஷின் புதிய படத்தின் தொடக்க விழாவில் கலந்துகொண்ட நடிகர் விஜய் சேதுபதி அப்படத்தை பூஜை போட்டு தொடங்கி வைத்துள்ளார்.

தமிழ் சினிமாவில் இருக்கும் பல முன்னணி ஹீரோயின்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ். திரில்லர் கதைக்களத்தில் இவர் நடிக்கும் புதிய படத்திற்கு ‘வளையம்’ என பெயரிடப்பட்டுள்ளது.

அறிமுக இயக்குநர் மனோ பாரதி இயக்கும் இப்படத்தில் நாயகனாக தேவ் அறிமுகமாக இவர்களுடன் சேர்ந்து சேத்தன், தமிழ், பிரதீப் ருத்ரா, ஹரிஷ் பெரேடி, சுரேஷ் மேனன் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ள இந்த படத்தை ஆக்சஸ் ஃபிலிம் ஃபேக்டரி சார்பில் ஜி. டில்லி பாபு தயாரிக்கிறார்

இப்படத்தின் தொடக்க விழா சென்னையில் நடைபெற்ற நிலையில் றப்பு விருந்தினராக கலந்துகொண்ட மக்கள் செல்வன் விஜய் சேதுபதி படத்திற்கு பூஜை போட்டு தொடங்கி வைத்துள்ளார்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Cinema News

Advertisement
 

Trending

 
Advertisement
To Top