Connect with us

2024 ஐபிஎல் தொடரில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் புதிய கேப்டனாக பேட் கம்மின்ஸ் நியமனம்..!!

Featured

2024 ஐபிஎல் தொடரில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் புதிய கேப்டனாக பேட் கம்மின்ஸ் நியமனம்..!!

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் புதிய கேப்டனாக ஆஸ்திரேலிய வீரர் பேட் கம்மின்ஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்த நடப்பாண்டுக்கான ஐபிஎல் கிரிக்கெட் தொடர் இம்மாதம் 22 ஆம் தேதி சென்னையில் உள்ள சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் கோலாகலமாக துவங்க உள்ளது.

இந்த தொடரின் முதல் போட்டியில் நடப்பு சாம்பியனான சென்னை அணி – பெங்களூரு அணியை எதிர்கொள்ள உள்ளது. இதற்காக இரு அணி வீரர்களும் ஆயுத்தமாகி வருகின்றனர்.

இந்நிலையில் நடப்பாண்டுக்கான ஐபிஎல் தொடரில் ஒரு சில அணிகளை தவிர மற்ற அணிகள் தங்களது கேப்டன்களை மாற்றி வருகின்றனர் .

அந்தவகையில் தற்போது சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியால் சுமார் 20.5 கோடிக்கு ஏலத்தில் எடுக்கப்பட்ட பேட் கம்மின்ஸை அந்த அணியின் புதிய கேப்டனாக நியமித்து அணி நிர்வாகம் செய்தி வெளியிட்டுள்ளது.

ஒவ்வரு ஆண்டும் என்னதான் தங்களது முழு திறனையும் வெளிப்படுத்தி விளையாடி வந்தாலும் ஹைதராபாத் அணியால் எதிர்பார்த்த அளவுக்கு ஜொலிக்க முடியாமல் போனது.

இந்நிலையில் உலகக்கோப்பை வென்ற ஆஸ்திரேலியா கேப்டனை பல கோடி கொடுத்து வாங்கி உள்ள அந்த அணி இந்த தொடரில் சாதிக்குமா என்பதை நாம் காத்திருந்து பார்க்கலாம்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  மிளகாய்ப் பொடி தூவி மணப்பெண் கடத்தல் - ஆந்திராவில் நடந்த அதிர்ச்சி சம்பவம்..!!!

More in Featured

To Top