Connect with us

“இயக்குனர் பார்த்திபனின் அடுத்த படத்தில் ஸ்ருதி ஹாசன்! வைரலாகிவரும் Photo!”

Cinema News

“இயக்குனர் பார்த்திபனின் அடுத்த படத்தில் ஸ்ருதி ஹாசன்! வைரலாகிவரும் Photo!”

இயக்குனர் பார்த்திபன் நேற்று தனது சமூக வலைத்தளத்தில் சகலகலாவல்லிக்கு எதற்கு பூங்கொத்து என்று ஸ்ருதிஹாசன் உடன் இணைந்து எடுத்த புகைப்படத்தை பதிவு செய்திருந்தார்.

இதனை அடுத்து பார்த்திபன் அடுத்த படத்தில் ஸ்ருதிஹாசன் பணிபுரிய உள்ளதாக கூறப்பட்டாலும் அவர் நடிக்கிறாரா? அல்லது இசையமைக்கிறாரா? பாடல் பாடுகிறாரா? என்று தெரியாமல் இருந்தது. இந்த நிலையில் இன்று பார்த்திபன் ஸ்ருதிஹாசன் குறித்து பதிவு செய்த ட்வீட்டில் தனது அடுத்த படத்தில் ஸ்ருதிஹாசன் ஒரு பாடலை பாடியுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

அதேபோல் இசையமைப்பாளர் இமான் அவர்களும் பார்த்திபன் நடிக்கும் அடுத்த படத்தில் ஒரு ரொமான்ஸ் பாடலை ஸ்ருதிஹாசன் பாடிய உள்ளதாகவும் அவர் மிகவும் மகிழ்ச்சியாக அந்த பாடலை பாடி கொடுத்ததாகவும் தெரிவித்திருந்தார்.

இதனை அடுத்து பார்த்திபன் அடுத்த படத்தில் ஸ்ருதிஹாசன் ஒரு பாடலை பாடியுள்ளார் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் இந்த படம் குறித்த சில தகவல்களை அடுத்தடுத்து பதிவு செய்ய இருப்பதாக பார்த்திபன் தெரிவித்துள்ளார்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  தரமான சம்பவம் Loading - விக்ரம் நடிக்கும் வீர தீர சூரன் படத்தின் புதிய போஸ்டர் வெளியானது..!!

More in Cinema News

To Top