Connect with us

“அந்தரங்க பாகங்கள Zoom செய்து பார்க்குறாங்க..! கொந்தளித்த நடிகை மிர்ணாள் தாகூர்!”

Cinema News

“அந்தரங்க பாகங்கள Zoom செய்து பார்க்குறாங்க..! கொந்தளித்த நடிகை மிர்ணாள் தாகூர்!”

கன்னடத்தில் கிரிக் பார்ட்டி படத்தில் நடித்ததின் மூலம் திரைத்துறைக்கு அறிமுகமானவர் நடிகை ராஷ்மிகா மந்தனா. கடந்த 2018ம் ஆண்டு அர்ஜூன் ரெட்டி திரைப்பட புகழ் விஜய் தேவரகொண்டாவுடன் இவர் நடித்து வெளியான ‘கீதா கோவிந்தம்’ திரைப்படம் இவரை பிரபலமாக்கியது. தொடர்ந்து முன்னணி நடிகையாக உயர்ந்த ராஷ்மிகா, தமிழில் கார்த்தி நடித்த சுல்தான் திரைப்படத்தில் நடித்தார். தொடர்ந்து அல்லு அர்ஜூன் நடித்த புஷ்பா, விஜயின் வாரிசு, அமிதாப்பச்சனின் குட் பாய் உள்ளிட்ட பல படங்களில் நட்சத்திர நடிகையாக வலம் வருகிறார்.

அண்மையில் இவர் அரைகுறை ஆடையுடன், லிஃப்ட் ஒன்றிற்குள் நுழைவது போன்ற வீடியோ ஒன்று இணையத்தில் வைரலானது. ஆனால் அதன் பின்னர்தான் தெரிந்தது, அந்த வீடியோவில் உண்மையாக இருந்த பெண்ணின் முகமானது, செயற்கை தொழில்நுட்பத்தின் வாயிலாக ராஷ்மிகா மந்தனாவாக மாற்றப்பட்டு இருப்பது என்பது. இதனை பாலிவுட் முன்னணி நடிகரான அமிதாப்பச்சன் கண்டித்ததோடு, இது தொடர்பாக சட்டரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ட்விட்டரில் தெரிவித்து இருந்தார்.

இந்த நிலையில் இந்த சம்பவம் குறித்து நடிகை ராஷ்மிகா நேற்றைய தினம் விளக்கம் கொடுத்தார். அந்த விளக்கத்தில், “ இணையத்தில் வைரலாகி வரும் செயற்கை தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உருவாக்கப்பட்ட deep fake வீடியோவை பற்றி பேசுவதற்கு வருத்தமாக இருக்கிறது. உண்மையாக இப்படியான ஒன்று, எனக்கு மிகவும் பயத்தை உருவாக்கி இருக்கிறது. நான் மட்டுமல்ல, இன்றைய உலகில் இந்த தொழில்நுட்பம் தவறாக பயன்படுத்தப்படுவதால் பலரும் பாதிப்புக்குள்ளாகிறார்கள். இன்று நான் ஒரு பெண்ணாகவும், ஒரு நடிகையாகவும் என்னுடைய குடும்பம், நண்பர்கள், என்னை பாதுகாப்பவர்கள் உள்ள்ட்டோருக்கு நன்றியுடன் இருக்கிறேன்.

ஆனால் இந்த மாதிரியான ஒன்று என்னுடைய பள்ளி மற்றும் கல்லூரி காலங்களில் நடந்து இருந்தால், அதனை எப்படி சமாளித்திருப்பேன் என்று நினைத்து கூட பார்க்க முடியவில்லை. இதனால், இதன் மூலம் பலர் பாதிக்கப்படுவதற்கு முன்னதாக இது குறித்து தெரியப்படுத்த வேண்டும்.” என்று குறிப்பிட்டு இருந்தார். இது குறித்து நடிகை மிருனாள் தாகூர் தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரி பக்கத்தில் குறிப்பிட்டு இருக்கும் அவர், “இது போன்ற செயல்களில் ஈடுபடும் நபர்கள் நிச்சயமாக வெட்கப்பட வேண்டும். இது அவர்களுக்கு மனசாட்சி இல்லை என்பதை காட்டுகிறது. ராஷ்மிகா இதனை பொதுவெளியில் பேசியதற்காக நன்றி கூறி கொள்ள விரும்புகிறேன்.

ஒவ்வொரு நாளும் பெண் நடிகர்களை ஆபாசமாக சித்தரித்து, அந்தரங்க பாகங்களை ஜூம் செய்து, வீடியோக்களை எடிட் செய்து அதனை இணையத்தில் உலாவ விடுகிறார்கள். ஒரு சமூகமாக நாம் எங்கே சென்று கொண்டிருக்கிறோம். நாங்கள் நடிகைகளாக இருப்பதால் எங்கள் மீது அதிக வெளிச்சம் விழுகிறது. ஆனால் இறுதியில் நாங்களும் மனிதர்கள்தான். நாம் ஏன் இதை பற்றி பேச தயங்குகிறோம். அமைதியாக இருக்க வேண்டாம். அதற்கான நேரம் இதுவல்ல” என்று குறிப்பிட்டு இருக்கிறார்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Cinema News

Advertisement
 

Trending

 
Advertisement
To Top