Connect with us

“வைரலாகிவரும் பிரபாஸின் ‘தி ராஜாசாப்’ பட First Look Poster! தனது பெயரை மாற்றினாரா பிரபாஸ்?!”

Cinema News

“வைரலாகிவரும் பிரபாஸின் ‘தி ராஜாசாப்’ பட First Look Poster! தனது பெயரை மாற்றினாரா பிரபாஸ்?!”

பிரபாஸ் நடிக்கும் ‘ராஜாசாப்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. அதில் பிரபாஸ் பெயரில் ஆங்கிலத்தில் கூடுதலாக ஒரு எஸ் சேர்க்கப்பட்டுள்ளது கவனம் பெற்றுள்ளது.

மாருதி தசாரி இயக்கத்தில் பிரபாஸ் நடிக்கும் புதிய படம் ‘தி ராஜாசாப். பீபுள் மீடியா ஃபேக்டரி தயாரிக்கும் இந்த படத்துக்கு தமன் இசையமைக்க உள்ளார். தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம், இந்தி ஆகிய மொழிகளில் இப்படம் வெளியாக உள்ளது.

இதன் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. வழக்கமாக ஆங்கிலத்தில் ‘PRABHAS’ என்று இடம்பெறும் பிரபாஸின் பெயர் இதில் கூடுதலாக ஒரு ‘எஸ்’ சேர்க்கப்பட்டு ‘PRABHASS’ என்று இடம்பெற்றுள்ளது.

தொடர் தோல்விகளால் நியூமராலஜி காரணங்களுக்காக தனது பெயரை பிரபாஸ் மாற்றிக் கொண்டதாக சமூக வலைதளங்களில் தகவல்கள் வெளியாகி வருகின்றன. ஆனால் இதுகுறித்து பிரபாஸ் தரப்பில் இருந்து அதிகாரபூர்வ தகவல் எதுவும் வெளியாகவில்லை.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  ஆக்சன் கில்லர் ஆக அவதாரம் எடுக்கும் தனுஷ், D54 படத்தின் அப்டேட்

More in Cinema News

To Top