Connect with us

பாலியல் சீண்டல்களுக்கு ஆதாரம் தர முடியாது – நடிகை பிரியாமணி ஓபன் டாக்..!!

Cinema News

பாலியல் சீண்டல்களுக்கு ஆதாரம் தர முடியாது – நடிகை பிரியாமணி ஓபன் டாக்..!!

கேரள திரையுலகில் நடக்கும் பாலியல் சீண்டல்கள் குறித்த ஹேமா கமிட்டி அறிக்கை வெளியிட்டுள்ள நிலையில் தற்போது கேரள திரையுலகமே திக்குமுக்காடி உள்ளது.

ஹேமா கமிட்டி அறிக்கையின் மூலம் பலரும் தங்களுக்கு நடந்த பாலியல் கொடுமைகள் குறித்து வாய் திறந்து வரும் நிலையில் கேரள சினிமாவின் டாப் ஸ்டார்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு வருகிறது.

இந்நிலையில் பிரபல தென்னிந்திய நடிகையான பிரியாமணி இதுகுறித்து கருத்து தெரிவித்து உள்ளார்.

மலையாள திரையுலகில் ஹேமா கமிட்டி அமைத்து அறிக்கை வெளியாகி இருப்பது மகிழ்ச்சியும் நம்பிக்கையும் அளிக்கிறது. சில நடிகைகள் தங்களுக்கு ஏற்பட்ட கசப்பான அனுபவங்களை பகிர்கிறார்கள். மலையாளத்தில் கமிட்டி அமைத்ததுபோல தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னட பட உலகிலும் கமிட்டிகள் அமைத்தால் நல்லது.

குற்றம் சாட்டப்பட்டவர்கள் யாராக இருந்தாலும் அவர்களை தண்டிக்க வேண்டும். திரைத்துறை மட்டுமன்றி எல்லா இடங்களிலும் பெண்களுக்கு பாலியல் தொல்லைகள் இருக்கின்றன.

பாலியல் துன்புறுத்தல்களுக்கு ஆதாரம் கேட்கிறார்கள். ஆனால் அந்த காலத்தில் நடந்த சம்பவங்களுக்கு ஆதாரம் தரமுடியாது. இப்போது கேமரா போன்கள் வந்துள்ளன. ஆனாலும் இப்போது வெளிப்படையாக பேசுவது மகிழ்ச்சி அளிக்கிறது என நடிகை பிரியாமணி தெரிவித்துள்ளார்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  ஜனநாயகன் படம் குறித்து பூஜா ஹெக்டே வெளியிட்ட அப்டேட் – போட்டோ பதிவு..

More in Cinema News

To Top