Connect with us

காங்கிரஸில் இணைகிறார் நடிகர் மன்சூர் அலிகான்..!!!

Featured

காங்கிரஸில் இணைகிறார் நடிகர் மன்சூர் அலிகான்..!!!

பரபரப்பான அரசியல் களத்தில் காங்கிரஸ் கட்சியில் இணைய விருப்பம் தெரிவித்து நடிகர் மன்சூர் அலிகான் கடிதம் கொடுத்துள்ளார்.

இந்திய ஜனநாயக புலிகள் கட்சியின் தலைவரும், நடிகருமான மன்சூர் அலிகான் சென்னை சத்யமூர்த்தி பவனில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் செல்வப்பெருந்தகையை இன்று நேரில் சந்தித்தார்.

இந்த சந்திப்பின்போது தன்னை ராகுல் காந்தி முன்னிலையில் காங்கிரஸ் கட்சியில் இணைத்துக் கொள்வதற்கு விருப்பம் தெரிவித்து அவர் கடிதம் ஒன்றையும் அளித்துள்ளார் .

இதையடுத்து செய்தியாளர்களைச் சந்தித்த மன்சூர் அலிகான் கூறியதாவது :

15 ஆண்டுகளுக்கு முன்பாக நான் காங்கிரஸ் கட்சியில் இருந்தேன். திண்டிவனம் ராமமூர்த்தியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டின் காரணமாக கட்சியிலிருந்து விலகிவிட்டேன். மீண்டும் கட்சியில் இணைவதற்காக கடிதம் கொடுத்திருந்தேன்.

கடந்த 10 ஆண்டுகளாக நாட்டை ஆண்ட பிரதமர் மோடி நாட்டுக்காக எதையும் செய்யவில்லை. தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக பிரதமர் எதையாவது பேசி ஒரு குழப்பத்தை உண்டாக்குகிறார் என மன்சூர் அலிகான் தெரிவித்துள்ளார்

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  செல்வராகவன் மீண்டும் விவாகரத்தா? சமூக வலைதளங்களில் வெடிக்கும் கேள்விகள்

More in Featured

To Top