Connect with us

“இந்த ஆண்டு 2023ல் தரமான Come Back கொடுத்த இயக்குனர்கள் List!”

Cinema News

“இந்த ஆண்டு 2023ல் தரமான Come Back கொடுத்த இயக்குனர்கள் List!”

ஆதிக் ரவிச்சந்திரன்

பிரபுதேவா நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கிய படம்தான் பஹிரா இந்த ஆண்டு மார்ச் மாதத்தில் வெளியானது, மிகவும் மோசமான விமர்சனங்களை பெற்றதால் படம் ஃப்ளாப் ஆனது. தோல்வியின் வலியை வெற்றியின் வெறியாக மாற்றி விஷால் எஸ் ஜே சூர்யாவை வைத்து மார்க் ஆண்டனி என்ற படத்தை இயக்கினார். படம் புதிய ஒரு முயற்சியாக இருந்தது. அவர் நினைத்ததை விட படம் மாபெரும் வெற்றிகொண்டது.

யுவராஜ் தயாளன்

வடிவேலுவை வைத்து எலி என்ற படத்தை இயக்கியவர்தான் யுவராஜ் தயாளன். எலி காமெடி படமாக இருந்தாலும் வடிவேலுவின் நகைச்சுவை பசிக்கு அது போதவில்லை. படத்தின் கதையும் மக்கள் மத்தியில் எடுபடவில்லை. இதனால் தோல்வியை சந்தித்த இயக்குனர் கம் ஃபாக் கொடுக்கவேண்டும் என்ற முனைப்பில் இந்த ஆண்டு அக்டோபர் மாதம் வெளியான இருகப்பற்று படத்தை இயக்கி இருந்தார். மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்று படம் ஹிட் அடித்தது.

நெல்சன் திலீப்குமார்

தளபதி விஜயை வைத்து இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் வெளியான படம்தான் பீஸ்ட். கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் வெளியான இந்த படம் பாக்ஸ் ஆபிஸை பதம்பார்த்து, ஆனால் மக்கள் மத்தியில் ஈர்க்கப்படவில்லை. அதனால் படம் தோல்வியை சந்தித்தது, இயக்குனர் நெல்சனை ரசிகர்கள் மிகவும் ட்ரோல் செய்து காயப்படுத்தினர். ஆனால் அவர் பாக்ஸ் ஆபிஸை அடித்து நொறுக்கவேண்டும் என்ற கட்டாயத்தில் தலைவர் ரஜினியை வைத்து ஜெயிலர் படத்தை இயக்கினார். படம் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் ப்ளாக்பஸ்டர் கொடுத்தது.

SU அருண் குமார்

நடிகர் விஜய்சேதுபதியை வைத்து சிந்துபாத் என்னும் படத்தை இயக்கியவர் தான் இயக்குனர் எஸ் யூ அருண் குமார். இந்தப்படம் மக்கள் மத்தியில் எடுபடவில்லை. இந்தநிலையில் கம் ஃபாக் கொடுக்கவேண்டிய கட்டாயத்தில் அவர் இயக்கிய படம் தான் சித்தா. இதில் சித்தார்த் ஹீரோவாக நடித்திருந்தார், இந்த ஆண்டில் வெளியான படங்களில் மிகவும் முக்கியமான மற்றும் கொண்டாடப்பட வேண்டிய ஒரு படைப்பு. மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்று ஹிட் ஆனது.

H வினோத்

நடிகர் அஜித்தை வைத்து இயக்குனர் ஹச் வினோத் இயக்கிய படம்தான் வலிமை. இந்த படம் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் வெளியானது. அஜித்தின் ரசிகர்களால் மிகவும் கொண்டாடப்பட்ட திரைப்படம் இது. இந்த படத்திற்கும் கலவையான விமர்சனங்களே வர நேர்ந்தது. அதனால் வெற்றியை கொடுக்கவேண்டும் என்ற பெயரில் அதே நடிகர் தல அஜித்தை வைத்து துணிவு என்ற படத்தை இயக்கினார். படம் இந்த ஆண்டின் பொங்கலுக்கு விஜயின் வாரிசு படத்திற்கு போட்டியாக வெளியானது. படம் ரசிகர்களை பிரமிப்பில் ஆழ்த்தியது. படம் மக்கள் மத்தியில் மிகவும் ஈர்க்கப்பட்டது. வசூல் ரீதியாவும் வாரிசு படத்தை முந்தியது. இந்த ஆண்டு 2023ல் தரமான கம் ஃபாக் கொடுத்த இயக்குனர்கள் இவர்கள்தான்.

See also  ஈடன் கார்டன் மைதானத்தில் இன்று மும்பை - கொல்கத்தா அணிகள் மோதல்..!!

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Cinema News

To Top