Connect with us

இந்தி நடிகருடன் இணைந்து பான் இந்தியா படத்தில் நடிக்கவிருக்கும் நடிகர் தனுஷ்!

Cinema News

இந்தி நடிகருடன் இணைந்து பான் இந்தியா படத்தில் நடிக்கவிருக்கும் நடிகர் தனுஷ்!

நடிகர் தனுஷ் நடித்துள்ள கேப்டன் மில்லர் வரும் 12ம் தேதி வெளியாகிறது. இதையடுத்து அவர் தனது இயக்கத்தில் நடித்துள்ள 50 வது படம் வெளியாக இருக்கிறது. இதற்கிடையே தனது மருமகன் ஹீரோவாக நடிக்கும், ‘நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்’ படத்தை இயக்கி வருகிறார்.

அடுத்து தெலுங்கு இயக்குநர் சேகர் கம்முலா, இந்தி இயக்குநர் ஆனந்த் எல்.ராய் இயக்கும் படங்களில் நடிக்க இருக்கிறார். இதற்கிடையே அவர் பிரபல இந்தி நடிகர் ஜிம் சர்ப் உடன் இணைந்து பான் இந்தியா படம் ஒன்றில் நடிக்க இருக்கிறார்.

இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று கூறப்படுகிறது. நடிகர் ஜிம் சர்ப், பத்மாவத், சஞ்சு, ஹவுஸ் அரஸ்ட், கங்கு பாய் கதியவாடி உட்பட பல இந்தி படங்களில் நடித்துள்ளார்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  “பெரும் சர்ச்சை! AVM சரவணனுக்கு அஞ்சலி செலுத்தாத Top Stars! 😮🔥”

More in Cinema News

To Top