Connect with us

பிரதீப் ரங்கநாதனின் ‘லவ் டுடே 2’ அப்டேட் – ரசிகர்கள் உற்சாகம்!

Cinema News

பிரதீப் ரங்கநாதனின் ‘லவ் டுடே 2’ அப்டேட் – ரசிகர்கள் உற்சாகம்!

தமிழ் சினிமாவில் ‘கோமாளி’ திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான பிரதீப் ரங்கநாதன், பின்னர் ‘லவ் டுடே’ படத்தின் மூலம் இயக்குனராகவும், நாயகனாகவும் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றார். இளம் தலைமுறை ரசிகர்களின் மனதை கவர்ந்த அந்த படம், அவரது கேரியரில் பெரிய வெற்றியாக அமைந்தது. அதன் தொடர்ச்சியாக அவர் பல படங்களில் நடித்து வருகிறார்.

தற்போது பிரதீப் ரங்கநாதன் கீர்த்தீஸ்வரன் இயக்கும் ‘டியூட்’ படத்திலும், விக்னேஷ் சிவன் இயக்கும் ‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’ என்ற படத்திலும் நடித்து முடித்துள்ளார். இந்த இரு படங்களும் விரைவில் திரைக்கு வரவிருக்கின்றன. குறிப்பாக ‘டியூட்’ படத்தின் புரமோஷன் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

அந்த புரமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிரதீப் ரங்கநாதன், செய்தியாளர்கள் கேள்விக்கு பதிலளிக்கும் போது, “லவ் டுடே 2 பற்றிய பணிகள் விரைவில் தொடங்கும்; தற்போது கதை எழுதும் பணிகள் நடைபெற்று வருகின்றன,” என்று தெரிவித்துள்ளார். இதனால் ‘லவ் டுடே’ ரசிகர்கள் பெரும் உற்சாகத்தில் உள்ளனர்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Cinema News

Advertisement
 

Trending

 
Advertisement
To Top