Connect with us

திரையரங்கில் தனுஷ்–அனிருத் கூட்டணி திரும்ப வருகிறது; விரைவில் அறிவிப்பு வெளியாக வாய்ப்பு

Cinema News

திரையரங்கில் தனுஷ்–அனிருத் கூட்டணி திரும்ப வருகிறது; விரைவில் அறிவிப்பு வெளியாக வாய்ப்பு

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக உள்ள தனுஷ், தற்போது இயக்கி நடித்துள்ள ‘இட்லி கடை’ படத்துடன் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளார். அக்டோபர் 1ஆம் தேதி திரைக்கு வந்த இந்த படம், ரசிகர்களில் பெரும் எதிர்பார்ப்பையும், பேசுபொருளையும் ஏற்படுத்தியுள்ளது. இதைத் தொடர்ந்து தனுஷ் அடுத்து நடிக்க உள்ள படத்திற்கான உற்சாகம் ரசிகர்களிடையே அதிகமாக உள்ளது.

சமீபத்தில் வெளியாகிய தகவலின் படி, ‘லப்பர் பந்து’ படத்தின் இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில் தனுஷ் நடிக்க உள்ளார். மேலும், இப்படத்திற்கு டான் பிக்சர்ஸ் தயாரிப்பாளராக செயல்படுவார், அனிருத் இசையமைப்பாளர் ஆக இருப்பார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் மீண்டும் இணைந்துள்ள தனுஷ்–அனிருத் கூட்டணி ரசிகர்களுக்கு மிகுந்த உற்சாகத்தை அளித்துள்ளது.

டான் பிக்சர்ஸ் சமீபத்தில் தனுஷ் நடித்த ‘இட்லி கடை’ மற்றும் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகும் ‘பராசக்தி’ படங்களையும் தயாரித்துள்ளது. இதன் பின்னர், தனுஷின் புதிய படத்தை மீண்டும் டான் பிக்சர்ஸ் தயாரிக்க இருப்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ் திரையுலகின் முன்னணி இசையமைப்பாளராக உள்ள அனிருத், தனுஷ் நடித்து வெளிவந்த ‘3’ படத்தினூடே அறிமுகமானார். இதனை தொடர்ந்து ‘வேலையில்லா பட்டதாரி’, ‘மாரி’, ‘தங்கமகன்’, ‘திருச்சிற்றம்பலம்’ போன்ற படங்களுக்கு அவர் இசையமைத்துள்ளார். இந்த படங்களின் மூலம் தனுஷ்–அனிருத் கூட்டணி ரசிகர்களிடையே சிறந்த புகழையும் எதிர்பார்ப்பையும் பெற்றது. ‘திருச்சிற்றம்பலம்’ படத்திற்கு பிறகு இந்த கூட்டணி மீண்டும் எப்போது அமையும் என்று ரசிகர்கள் காத்திருந்த நிலையில், தற்போது கிடைத்துள்ள இன்பச் செய்தி அவர்களை பெரும் உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Cinema News

Advertisement
 

Trending

 
Advertisement
To Top