Connect with us

“மீண்டும் இணையும் ஆர்யா – சந்தானம் கூட்டணி! இயக்குனர் யார் தெரியுமா?!”

Cinema News

“மீண்டும் இணையும் ஆர்யா – சந்தானம் கூட்டணி! இயக்குனர் யார் தெரியுமா?!”

ஆர்யா மற்றும் சந்தானம் இணைந்து நடித்த ’பாஸ் என்ற பாஸ்கரன்’ உள்பட சில படங்கள் சூப்பர் ஹிட் ஆகியது என்பதும் இருவரும் இணைந்து நடித்தாலே காமெடி களைகட்டும் என்பதும் தெரிந்ததே. இந்த நிலையில் கடந்த சில ஆண்டுகளாக சந்தானம் ஹீரோவாக நடித்து வருவதை அடுத்து ஆர்யாவுடன் இணைந்து நடிக்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை.

இந்நிலையில் தற்போது மீண்டும் ஆர்யா மற்றும் சந்தானம் இணைந்து நடிக்க உள்ளதாக ’வடக்குப்பட்டி ராமசாமி’ படத்தின் ப்ரோமோஷன் விழாவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கார்த்திக் யோகி இயக்கத்தில் உருவான ’வடக்குப்பட்டி ராமசாமி’ படத்தின் புரமோஷன் விழாவில் சிறப்பு விருந்தினராக ஆர்யா கலந்து கொண்ட நிலையில் அவர் இந்த விழாவில் பேசிய போது ’நானும் சந்தானமும் சேர்ந்து ஒரு படத்தில் நடிக்க உள்ளோம்.

இந்த படத்தையும் கார்த்திக் யோகி தான் இயக்க உள்ளார். இது ஒரு அட்வென்ச்சர் படமாக மட்டுமின்றி ‘பாஸ் என்ற பாஸ்கரன்’ படத்தை மிஞ்சுகிற அளவுக்கு இந்த படம் காமெடியாகவும் இருக்கும் என்று தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே சந்தானம் நடித்த ‘டிக்கிலோனா’, ‘வடக்குப்பட்டி ராமசாமி’ ஆகிய இரண்டு படங்களை இயக்கியுள்ள கார்த்திக் யோகி, மீண்டும் சந்தானம் நடிக்கும் படத்தை இயக்க உள்ளார் என்பதும் அதில் ஆர்யாவும் நடிக்க உள்ளார் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  Jailer 2 Box Office: மீண்டும் மாஸ் காட்டிய ரஜினி! ஒரே நாளில் ரூ.24 கோடி வசூல்.. ரூ.1000 கோடியை நெருங்குமா ஜெயிலர் 2?

More in Cinema News

Advertisement
 

Trending

 
Advertisement
To Top