Connect with us

வசூலை குவிக்கும் RJ பாலாஜியின் ‘சிங்கப்பூர் சலூன்’ படம்! எவ்வளவு தெரியுமா?!

Cinema News

வசூலை குவிக்கும் RJ பாலாஜியின் ‘சிங்கப்பூர் சலூன்’ படம்! எவ்வளவு தெரியுமா?!

RJ பாலாஜி நடித்த ‘சிங்கப்பூர் சலூன்’ என்ற திரைப்படம் நேற்று வெளியான நிலையில் இந்த படத்திற்கு பாசிட்டிவ் விமர்சனங்கள் கிடைத்ததை அடுத்து முதல் நாளை விட இரண்டாவது நாளில் அதிகமாக வசூல் செய்து இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த படத்தை அனைத்து தரப்பினரும் குறிப்பாக இளைஞர்கள் விரும்பி பார்த்து வருகிறார்கள் என்றும் இதனால் முதல் நாள் வசூலை விட இரண்டாவது நாள் வசூல் அதிகமாக வந்திருப்பதாகவும் விநியோகிஸ்தர்கள் கூறியுள்ளனர். மேலும் இன்றும் நாளையும் விடுமுறை தினம் என்பதால் இந்த படம் கூடுதல் வசூல் செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதுமட்டுமின்றி குடும்ப ஆடியன்ஸ்கள் திரையரங்குகளுக்கு கூட்டம் கூட்டமாக வந்து கொண்டிருப்பதாகவும் தெரிகிறது. RJ பாலாஜி தேர்வு செய்த கதை அனைத்து வயதினருக்கும் பொருத்தமான கதையாக இருப்பதால் வார இறுதி வசூல் மிகவும் திருப்திகரமாக இருக்கும் என்றும் ஒரு விடுமுறை தினத்திற்கான முழு திருப்தி அளிக்கும் படமாக இந்த படம் இருப்பதாகவும் விமர்சனங்கள் எழுந்து உள்ளன.

RJ பாலாஜி ஏற்கனவே ’LKG’, ’மூக்குத்தி அம்மன்’, ‘வீட்ல விசேஷம்’, ‘ரன் பேபி ரன்’ உள்ளிட்ட வெற்றி படங்களை கொடுத்த நிலையில் அவருடைய வெற்றி பட வரிசையில் இந்த ’சிங்கப்பூர் சலூன்’ படமும் இணைந்துள்ளதாக கருதப்படுகிறது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  போடு வெறித்தனம் வெறித்தனம் - வெளியானது தலைவர் 171 படத்தின் டைட்டில் டீசர்..!!!

More in Cinema News

To Top