Connect with us

5 ஆண்கள் செய்யும் வேலையை ஒரு பெண்ணால் செய்ய முடியும் – மாணவிகள் மத்தியில் எழுச்சியுரையாற்றிய சூர்யா..!!

Cinema News

5 ஆண்கள் செய்யும் வேலையை ஒரு பெண்ணால் செய்ய முடியும் – மாணவிகள் மத்தியில் எழுச்சியுரையாற்றிய சூர்யா..!!

பெண்கள் அங்கீகாரம் பெறுவதற்கு ஆண்களைவிட 50% அதிகமாக உழைக்க வேண்டி உள்ளது . அவர்களை இன்னும் மேலே கொண்டு வர நாம் அனைவரும் சேர்ந்து உழைப்போம் என மாணவிகள் மத்தியில் நடிகர் சூர்யா எழுச்சி உரையாற்றியுள்ளார்.

அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல், கணிதம் ஆகியவற்றை உள்ளடக்கிய (STEM) உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சிப் படிப்புகளில் பெண்கள் அதிகளவில் பங்குபெற வைக்க வேண்டும் என்பதை கருப்பொருளாகக் கொண்டு .

அகரம் அறக்கட்டளை உள்ளிட்ட தன்னார்வ அமைப்புகள் சார்பாக சென்னை கிண்டியில் உள்ள சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெறும் ‘EMPOW HER – 2024’ சர்வதேச கருத்தரங்கு இன்று கோலாகலமாக தொடங்கியது.

இந்த விழாவில் கலந்துகொண்டு மாணவிகள் மத்தியில் சிறப்பு உரையாற்றிய நடிகர் சூர்யா கூறியதாவது :

பெண்கள் அங்கீகாரம் பெறுவதற்கு ஆண்களைவிட 50% அதிகமாக உழைக்க வேண்டி உள்ளது. ஆனால், 5 ஆண்கள் செய்யும் வேலையை ஒரு பெண்ணால் செய்ய முடியும். அந்தளவுக்கு அவர்களிடம் சக்தி உள்ளது. அவர்களை இன்னும் மேலே கொண்டு வர நாம் அனைவரும் சேர்ந்து உழைப்போம்.

கல்வியில் , விளையாட்டில் பல சாதனைகளை செய்து வரும் பெண்களின் வளர்ச்சிக்கு நம்மால் முடிந்த அனைத்தையும் செய்வோம் என நடிகர் சூர்யா தெரிவித்துள்ளார்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Cinema News

Advertisement
 

Trending

 
Advertisement
To Top