Connect with us

71 வயதில் இளமையோடு Actor சரத்குமார்! சொத்து மதிப்பு கேட்டா ஷாக் ஆகுவீங்க!

Featured

71 வயதில் இளமையோடு Actor சரத்குமார்! சொத்து மதிப்பு கேட்டா ஷாக் ஆகுவீங்க!

தமிழ் சினிமாவில் கடந்த 35 ஆண்டுகளுக்கும் மேலாக பயணித்து வருபவர்களில் ஒருவர் நடிகர் சரத்குமார். இவர் இதுவரை 150க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார்.

சூர்யன், நாட்டாமை, சூர்யவம்சம், நட்புக்காக, ஐயா, சமுத்திரம் உள்ளிட்ட பல சூப்பர்ஹிட் படங்களை திரைத்துறைக்கு வழங்கியுள்ளார். தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் ஹிந்தி மொழிகளிலும் நடித்துள்ளார். தனது நடிப்பிற்கு பதிலாக தயாரிப்பாளராகவும் செயல்பட்டுள்ள சரத்குமார், இதுவரை 10க்கும் மேற்பட்ட திரைப்படங்களை தயாரித்துள்ளார். அதுமட்டுமன்றி, “தலைமகன்” என்ற திரைப்படத்தை இயக்கியதன் மூலம் இயக்குனராகவும் கைசமயம் செய்துள்ளார்.

சமீபத்தில், இவரது நடிப்பில் வெளியான “3BHK” திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பைப் பெற்று, வெற்றிகரமான ஓட்டத்தை கண்டுள்ளது. இன்றைய தினம், நடிகர் சரத்குமார் தனது 71வது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார். 71 வயதானாலும், 25 வயது இளைஞரை போலவே தன்னுடைய உடலைச் சுறுசுறுப்பாக மற்றும் ஆரோக்கியமாக வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், நடிகர் சரத்குமார் தொடர்பான சொத்து மதிப்பு மற்றும் சம்பள விவரங்கள் தற்போது வெளியாகியுள்ளது. அதன்படி, இவரது மொத்த சொத்து மதிப்பு ரூ. 35 கோடி முதல் ரூ. 40 கோடி வரை இருக்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், ஒரு திரைப்படத்தில் நடிக்க இவர் ரூ. 3 கோடி வரை சம்பளமாக பெறுகிறாராம். சமூக வலைதளங்களில் ரசிகர்கள் அவருக்கு பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டிருக்கின்றனர்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  கேரளாவில் முதல்முறையாக வரலாற்றில் பெயர் பதித்த லோகா!

More in Featured

To Top