Connect with us

உலகக்கோப்பை கேரம் சாம்பியன்ஷிப் போட்டி – தங்கம் வென்று சாதனை படைத்த தமிழக வீராங்கனை..!!

Featured

உலகக்கோப்பை கேரம் சாம்பியன்ஷிப் போட்டி – தங்கம் வென்று சாதனை படைத்த தமிழக வீராங்கனை..!!

அமெரிக்காவில் நடைபெற்ற 6வது உலகக்கோப்பை கேரம் சாம்பியன்ஷிப் போட்டியில் 3 பிரிவுகளில் தங்கம் வென்று சாதனை படைத்துள்ளார் தமிழக வீராங்கனை காசிமா.

சென்னை புது வண்ணாரப்பேட்டை பகுதியை சேர்ந்தவர் 17 வயதாகும் காசிமா . சிறு வயது முதல் கேரம் விளையாட்டில் கைதேர்ந்த வீராங்கனையாக வலம் வந்த இவர் பல பதக்கங்களை வென்று பிறந்த மண்ணுக்கு பெருமை சேர்ந்துள்ளார் .

இந்நிலையில் அமெரிக்காவில் நடைபெற்ற 6வது உலகக்கோப்பை கேரம் சாம்பியன்ஷிப் போட்டிக்கு தகுதி பெற்ற காசிமா தமிழ்நாடு அரசின் உதவியுடன் அமெரிக்காவுக்கு பறந்து சென்று அங்கு 3 பிரிவுகளில் நடைபெற்ற போட்டிகளில் தங்கம் வென்று அபாரமான சாதனையை படைத்துள்ளார் .

கண்டம் விட்டு கண்டம் சென்று தமிழக வீராங்கனை காசிமா உலக அளவில் சாதனை படைத்துள்ள நிலையில் அவருக்கு பாராட்டுகளும் வாழ்த்துக்களும் குவிந்து வருகிறது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  சித்தார்த் தன் ட்ரோல்களுக்கு சரியான பதிலடி கொடுத்து கலக்கினார்!

More in Featured

To Top