Connect with us

“விஜய்க்கு ஓட்டு போடுவீங்களா..?” – நடிகர் அர்ஜுன் தாஸ் சொன்ன நச் பதில்

Cinema News

“விஜய்க்கு ஓட்டு போடுவீங்களா..?” – நடிகர் அர்ஜுன் தாஸ் சொன்ன நச் பதில்

தளபதி தீவிர ரசிகரும் நடிகருமான அர்ஜூன் தாஸ் விஜயின் அரசியல் பயணம் குறித்த கேள்விக்கு சுவாரஸ்யமான பதிலை கொடுத்துள்ளார்.

தளபதி என்று ரசிகர்களால் அன்போடு போற்றப்படும் நடிகர் விஜய் கடந்த சில மாதங்களாகவே தனது விஜய் மக்கள் இயக்கம் மூலம் மாணவர்களுக்கு பல நலத்திட்ட உதவிகள் மற்றும் வெள்ள நிவாரண உதவிகள் என தொடர்ந்து மக்கள் பணியில் தீவிரம் காட்டி வந்தார் .

அப்போதே தெரிந்துவிட்டது அவர் விரைவில் அரசியலில் களமிறங்க போகிறார் என்று அதற்கேற்றாற் போல் இன்று அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வந்துவிட்டது .

இந்நிலையில் நடிகர் விஜயின் இந்த அரசியல் பயணத்திற்கு ஒரு பக்கம் பலரும் வாழ்த்து தெரிவித்து வந்தாலும் மறுபக்கம் அவரது தொடர்ந்து படங்களில் நடிக்க வேண்டும் என கோரிக்கைகளும் வைத்து வருகின்றனர்.

இந்நிலையில் விஜய்யின் இந்த அரசியல் பயணம் குறித்து நடிகர் அர்ஜுன் தாஸ் மனம் திறந்து பேசியுள்ளார்.

கோவையில் நடைபெற்ற ‘போர்’ திரைப்பட குழுவின் செய்தியாளர் சந்திப்பில் நடிகர்கள் அர்ஜூன் தாஸ், காளிதாஸ் ஜெயராம், சஞ்சனா நடராஜன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

அப்போது நடிகர் அர்ஜுன் தாஸிடம் விஜய்யின் அரசியல் என்ட்ரி குறித்த கேள்வி கேட்கப்பட்டது ;

செய்தியாளர்களின் இந்த கேள்விக்கு பதிலளித்த அர்ஜுன் டாஸ் கூறியதாவது :

தளபதியின் தீவிர ரசிகன் நான் அவர் எது செய்தாலும் யோசிச்சு தான் செய்வார் அதனால் அவர்க்கு எனது வாழ்த்துக்கள்.

இதையடுத்து அவருக்கு ஓட்டுக்கு ஓட்டுபோடுவிங்களா என்ற கேள்விக்கு அதை எப்படி நான் பொது வெளியில் சொல்ல முடியும் என்று சிரித்திக்கொண்டு எஸ்கேப் ஆகிவிட்டார்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Cinema News

Advertisement
 

Trending

 
Advertisement
To Top