Connect with us

தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான ஒரு நாள் தொடரை வெல்லுமா இந்திய அணி..? இன்று கடைசி மற்றும் 3வது ஒருநாள் போட்டி..!!

Featured

தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான ஒரு நாள் தொடரை வெல்லுமா இந்திய அணி..? இன்று கடைசி மற்றும் 3வது ஒருநாள் போட்டி..!!

இந்தியா மற்றும் தென் ஆப்ரிக்க அணிகளுக்கு இடயிலான கடைசி மற்றும் 3வது ஒருநாள் போட்டி இன்று நடைபெற உள்ளது.

தென்னாப்பிரிக்கா நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 2 டெஸ்ட், 3 ஒரு நாள் மற்றும் 3 டி20 போட்டி கொண்ட தொடரில் விறுவிறுப்பாக விளையாடி வருகிறது .

இந்நிலையில் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில் கடந்த 17 ஆம் தேதி அன்று நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில் சிறப்பாக விளையாடிய இந்திய அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தென்னாப்ரிக்கா அணியை வீழ்த்தியது.

இதையடுத்து கடந்த 19 ஆம் தேதி அன்று நடைபெற்ற 2வது ஒருநாள் போட்டியில் சிறப்பாக விளையாடிய தென்னாப்ரிக்கா அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்தியது.

இந்நிலையில் இந்தியா-தென் ஆப்பிரிக்கா இடையேயான கடைசி மற்றும் 3ஆவது
ஒருநாள் போட்டி உலக புகழ் பெற்ற போலண்ட் பார்க் மைதானத்தில் இன்று மாலை 4.30 மணிக்கு நடைபெறுகிறது .

3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் 1-1 என்ற கணக்கில் இரு அணிகளும் சமனில் உள்ளதால் இன்று நடைபெறும் போட்டியில் தொடரை வெல்ல இரு அணிகளும் முழு திறனையும் காட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் கே.எல்.ராகுல் தலைமையிலான இந்திய அணி தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான ஒரு நாள் தொடரை வெல்லுமா இல்லையா என்பதை நாம் காத்திருந்தது பார்க்கலாம் .

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  பெண் கிராம அலுவலரை தாக்கிய திமுக நிர்வாகி - வெளுத்துவாங்கிய அண்ணாமலை..!!!

More in Featured

To Top