Connect with us

வயநாட்டிற்கு வந்த ராகுல், பிரியங்கா தூத்துக்குடிக்கு ஏன் வரவில்லை..? – சீமான் காரசார கேள்வி

Featured

வயநாட்டிற்கு வந்த ராகுல், பிரியங்கா தூத்துக்குடிக்கு ஏன் வரவில்லை..? – சீமான் காரசார கேள்வி

வயநாட்டில் நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட மக்களை ஓடி வந்து பார்த்த ராகுல், பிரியங்கா தூத்துக்குடி பெரும் வெள்ளத்தில் மக்கள் தத்தளித்தபோது ஒருத்தர் கூட வந்து பார்க்காதது ஏன்? என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் காரசார கேள்விகளை எழுப்பியுள்ளார்.

சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த சீமான் கூறியதாவது :

நாட்டில் நடக்கும் குற்றம் குறைகளையும் அம்பலப்படுத்துவது , உண்மையை உறக்கப் பேசுவது குற்றமாக கருதப்படுமானால் அந்த நாட்டை குற்றவாளிகள் ஆள்கிறார்கள் என பொருள். 200 நாட்களில் 500 கொலை நடந்துள்ளன.99% குற்றங்களுக்கு காரணம் போதை வஸ்துக்கள்தான்.

வயநாடு நிலச்சரிவு பாதிப்பை ராகுல்காந்தியும், பிரியங்கா காந்தியும் ஓடி வந்து பார்ப்பது மகிழ்ச்சிதான். அவர்கள் தொகுதி என்பதால் ரூ.1கோடி நிதி அறிவிக்கிறார்கள். ஓடிவந்து பார்க்கிறார்கள்.

கடந்த சில மாதங்களுக்கு முன் கொட்டிதீர்த்த கனமழையால் தூத்துக்குடி பெரும் வெள்ளத்தில் சிக்கி மக்கள் தத்தளித்தபோது ஒருத்தர் கூட வந்து பார்க்காதது ஏன்..? என அவருக்கே உரித்தான வாய்மொழியில் சீமான் கேள்வி எழுப்பினார்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  “Gentleman Driver 2025: அஜித் குமாருக்கு சர்வதேச பெருமை!”

More in Featured

To Top