Connect with us

ஹெல்மெட் அணியாமல் பைக் ஓட்டிய பிரபல யூடியூபர் இர்ஃபான் – கடமையை செய்த காவல்துறை..!!

Cinema News

ஹெல்மெட் அணியாமல் பைக் ஓட்டிய பிரபல யூடியூபர் இர்ஃபான் – கடமையை செய்த காவல்துறை..!!

பிரபல யூடியூபர் இர்ஃபான் ஹெல்மெட் அணியாமல் பைக் ஓட்டிய வீடியோ இணையத்தில் வைரலானதை அடுத்து அவர் மீது கடும் விமர்சனம் எழுந்த நிலையில் தற்போது காவல்துறை தனது கடமையை செய்துள்ளது.

உலகம் முழுவதும் யூடியூப் எந்த அளவிற்கு பேமஸ் ஆக இருக்கிறதோ அந்த அளவிற்கு அதில் வீடியோ பதிவிடும் யூடியூபர்களும் மக்கள் மத்தியில் மிகவும் பேமஸ் ஆன நபர்களாக வலம் வருகின்றனர் .

பணத்திற்கு பணம் ஜாலிக்கு ஜாலி என சிறுவர் முதல் முதியவர்கள் வரை தங்களுக்கு பிடித்ததை யூடியூப் விதிமுறைகளுக்கு உட்பட்டு வீடியோவாக எடுத்து பதிவிட்டு நவீன தொழிநுட்பங்களுடன் போட்டிபோட்டுக்கொண்டு முன்னேறி வருகின்றனர் .

அந்தவகையில் தமிழ்நாட்டில் இருக்கும் பிரபல யூடியூபர்களில் ஓவராக வலம் வருபவர் தான் யூடியூபர் இர்ஃபான் . ‘இர்பான் வியூஸ்’ எனும் யூடியூப் சேனலை நடத்தி வரும் இவர் உணவகங்களில் உள்ள உணவுகளை ரிவியூ செய்வதன் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானார் .

இந்நிலையில் சமீப காலமாக அடிக்கடி சர்ச்சைகளில் சிக்கி வரும் இர்ஃபான் தற்போது மீண்டும் ஒரு சிக்கலில் சிக்கியுள்ளார் .

அண்மையில் ஹெல்மெட் அணியாமல் விலையுயர்ந்த பைக்கை இர்பான் ஓட்டிய வீடியோ சமுக வலைத்தளங்களில் வைரலானது.அந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் அவரை வாய்க்கு வந்தபடி கடுமையாக விமர்சித்தனர் .

இந்த வீடியோ காவல்துறையின் கவனத்திற்கு செல்ல சற்றும் யோசிக்காமல் ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டியது முறையான நம்பர் ப்ளேட் இல்லாதது உள்ளிட்டவைக்காக யூடியூபர் இர்ஃபானுக்கு ரூ.1,500 அபராதம் விதித்துள்ளனர்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  கோட் படத்தின் Sneak Peek வீடியோ வெளியானது..!!

More in Cinema News

To Top