Connect with us

‘ராயன்’ படத்தின் ‘வாட்டர் பாக்கெட்’ பாடல் வெளியானது..!!

Cinema News

‘ராயன்’ படத்தின் ‘வாட்டர் பாக்கெட்’ பாடல் வெளியானது..!!

குளோபல் ஸ்டார் தனுஷ் இயக்கி நடிக்கும் ‘ராயன்’ படத்தின் வாட்டர் பாக்கெட் என்ற பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது.

நடிகர் தனுஷ் தனது 50 ஆவது படத்தை அவரே இயக்கி நடிக்க உள்ளார் என்ற செய்தி வெளியான நாள் முதல் இப்படம் குறித்து அவரது ரசிகர்கள் மத்தியில் ஏகபோக எதிர்பார்ப்பு நிலவி வருகிறது .

சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் பிரம்மாண்ட பொருட்செலவில் தயாராகும் இப்படத்திற்கு ராயன் என பெயரிடப்பட்டுள்ளது .

இப்படத்தில் தனுஷ் உடன் சேர்ந்து காளிதாஸ் மற்றும் சந்தீப் கிஷன் , செல்வராகவன் , எஸ்.ஜே.சூர்யா,அபர்ணா பாலமுரளி, துஷாரா விஜயன் ஆகியோர் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளனர்.

ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைப்பில் உருவாகும் இந்த படத்தின் பாடல் அணிவதும் ஒவ்வொன்றாக வெளியாகி வரும் நிலையில் தற்போது இப்படத்தின் அடுத்த பாடலான வாட்டர் பாக்கெட் என்ற பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது.

ஏ.ஆர்.ரஹ்மான் இசையில், சந்தோஷ் நாராயணன், ஸ்வேதா மோகன் ஆகியோரின் குரலில் கானா பாடலாக இப்பாடல் உருவாகியுள்ளது.

இதோ இந்த படலை கேட்டு உங்கள் கருத்துக்களை எங்களுடன் பகிருங்கள்…

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Cinema News

Advertisement
 

Trending

 
Advertisement
To Top