Connect with us

💍✨ “பிரம்மாண்டம் வேண்டாம்” – பதிவு திருமணம் குறித்து ஸ்ருதி ஹாசன் ஓபன் டாக்

Cinema News

💍✨ “பிரம்மாண்டம் வேண்டாம்” – பதிவு திருமணம் குறித்து ஸ்ருதி ஹாசன் ஓபன் டாக்

நடிகை ஸ்ருதி ஹாசன், கமல்ஹாசனின் மகள் என்ற அடையாளத்துடன் தமிழ் திரையுலகில் அறிமுகமாகி, பின்னர் தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பல மொழிகளில் தொடர்ந்து நடித்து முன்னணி நடிகையாக தன்னை நிலைநிறுத்திக் கொண்டுள்ளார். தற்போது 39 வயதாகும் அவர், இதுவரை திருமணம் செய்து கொள்ளாத நிலையில், தனது தனிப்பட்ட வாழ்க்கை குறித்து அவ்வப்போது வெளிப்படையாக பேசிவருகிறார். சமீபத்தில் திருமணம் பற்றி கருத்து தெரிவித்த ஸ்ருதி ஹாசன், இன்றைய காலத்தில் திருமணங்களை பிரம்மாண்டமாக நடத்துவதற்காக தேவையற்ற செலவுகள் செய்யப்படுகின்றன என கூறினார்.



அதற்கு பதிலாக, எளிமையும் அர்த்தமும் முக்கியம் என வலியுறுத்திய அவர், தானே ஒருவேளை திருமணம் செய்தால், சடங்குகள் இல்லாமல் நேரடியாக ரெஜிஸ்டர் ஆபீஸில் பதிவு திருமணமாகத்தான் செய்து கொள்வேன் எனத் தெரிவித்தார். ஸ்ருதி ஹாசனின் இந்த தெளிவான மற்றும் தைரியமான கருத்து தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி, ரசிகர்களிடையே பெரும் விவாதத்தை ஏற்படுத்தி வருகிறது

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  Padayappa மீண்டும் திரையரங்கில் – Fans Mass Celebration 💥

More in Cinema News

To Top