Connect with us

இவ்வளவு வயது வித்தியாசமா? விஷால் & சாய் தன்ஷிகா திருமண தகவல்!

Featured

இவ்வளவு வயது வித்தியாசமா? விஷால் & சாய் தன்ஷிகா திருமண தகவல்!

முன்னணி நடிகர் விஷால் திருமணம் செய்யப்போகிறார் என்ற செய்தி ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது. நேற்று மாலை நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில், நடிகர் விஷால் தனது காதலியைப் பற்றி அறிவித்தார்.

அவர் கூறியதாவது, நடிகை சாய் தன்ஷிகாவை தான் காதலிக்கிறார் என்றும், இருவரும் கடந்த 15 ஆண்டுகளாக நண்பர்களாக இருந்த நிலையில் அது காதலாக மாறியுள்ளதாக தெரிவித்தார். இவர்கள் திருமணம் நடிகர் விஷாலின் பிறந்த நாளான வருகிற ஆகஸ்ட் 29ஆம் தேதி நடைபெற உள்ளது.தற்போது நடிகர் விஷாலுக்கு 47 வயதாகிறது. நடிகை சாய் தன்ஷிகாவுக்கு 35 வயது.

இருவருக்கும் 12 வயது வித்தியாசம் இருந்தாலும், ஒருவரை ஒருவர் நன்றாக புரிந்துகொண்டு வருகின்றனர். தகவல் வெளியாகிய பிறகு, ரசிகர்கள் சமூக வலைதளங்களில் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Featured

Advertisement
 

Trending

 
Advertisement
To Top