Connect with us

ஆப்கானிஸ்தானுக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இருந்து விராட் கோலி விலகல் – அதிர்ச்சியில் ரசிகர்கள்

Featured

ஆப்கானிஸ்தானுக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இருந்து விராட் கோலி விலகல் – அதிர்ச்சியில் ரசிகர்கள்

ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இருந்து விராட் கோலி விலகிருப்பதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகி உள்ளது.

இந்தியவுக்கு சுற்று பயணம் மேற்கொண்டுள்ள ஆப்கானிஸ்தான் அணி 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாட உள்ளது.

இதற்காக இந்த இரு அணிகளின் வீரர்கள் பட்டியலை BCCI கடந்த சில நாட்களுக்கு முன் அறிவித்தது.

அதன்படி ரோஹித் ஷர்மா தலைமையிலான இந்திய அணியில் HitMan Rohit ரோஹித் ஷர்மா (C), சுப்மன் கில், ஜெய்ஸ்வால், விராட் கோலி, திலக், ரிங்கு சிங், ஜிதேஷ் சர்மா (WK), சஞ்சு சாம்சன் (WK), ஷிவம் துபே, வாசிங்டன் சுந்தர், அக்சர் படேல், ரவி பிஷ்னோய், குல்தீப் யாதவ், அர்ஷ்தீப் சிங், அவேஷ் கான், முகேஷ் குமார் ஆகியோர் இடம்பெற்றுகின்றனர்.

அதேபோல் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டி20 தொடரில் இருந்து இந்திய வீரர்களான ஹர்திக், சூர்யகுமார், ருத்துராஜ் ஆகியோர் காயம் காரணமாக விலகி உள்ளனர்.

இந்நிலையில் இந்திய அணியின் முன்னணி வீரரான விராட் கோலியும் தனிப்பட்ட காரணத்திற்காக நாளை நடைபெற உள்ள முதல் போட்டியில் இருந்து விலகி இருப்பதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகி உள்ளது.

இந்த செய்தி நாளை நடைபெறும் போட்டியில் நீண்ட நாட்களுக்கு பிறகு விராட்கோலி களத்தில் ஆடுவதை பார்க்கலாம் என எதிர்பார்த்து காத்திருந்த ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியா – ஆப்கானிஸ்தான் அணிகள் போதும் முதல் போட்டி வரும் 11ஆம் தேதி மொகாலியிலும், இரண்டாவது போட்டி 14ஆம் தேதி இந்தூரிலும், கடைசி போட்டி 17ஆம் தேதி பெங்களூருவிலும் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் நாளை நடைபெறும் முதல் போட்டியில் எந்த அணி வெல்லப்போகிறது எந்த அணி தோல்வியை சந்திக்கபோகிறது என்பதை நாம் காத்திருந்து பார்க்கலாம்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Featured

Advertisement
 

Trending

 
Advertisement
To Top