Connect with us

“பிரதீப் ரங்கநாதனும், யோகி பாபுவும் மீண்டும் இணையும் படம்! இயக்குனர் இவரா? வைரலாகிவரும் Photo!”

Cinema News

“பிரதீப் ரங்கநாதனும், யோகி பாபுவும் மீண்டும் இணையும் படம்! இயக்குனர் இவரா? வைரலாகிவரும் Photo!”

பெரிய ஹீரோ படங்களில் நகைச்சுவை வேடங்களில் நடித்து புகழ் பெற்றார் நடிகர் யோகி பாபு. தற்போது கதாநாயகனாக நடித்து மேலும் புகழடைந்துளார். அவர் இதுவரை நடித்த சிறந்த கதாபாத்திரங்களில் ஒன்று பிரதீப் ரங்கநாதனின் ‘லவ் டுடே’ படத்தில் அமைந்தது.

நகைச்சுவை மற்றும் இதயத்தை தொடும் கதாபாத்திரமாக அமைந்தது குறிப்பிடத்தக்கது. பிரதீப் தனது முதல் படமான ‘கோமாளி’ படத்திலும் யோகி பாபுவை மிக முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கவைத்தார். தற்போது விக்னேஷ் சிவன் இயக்கும் புதிய படத்திலும் இருவரும் மீண்டும் இணைந்து நடிப்பதுபோல் தெரிகிறது.

யோகி பாபு, பிரதீப் மற்றும் விக்கி இணைந்து ஒன்றாக எடுத்த புகைப்படம் வைரலாகிவருகிறது. இதன்முலம் அவரும் இந்த படத்தில் இருப்பதைக் குறிக்கிறது. பிரதீப் ரங்கநாதன் – விக்னேஷ் சிவன் திட்டம் முதலில் கமல்ஹாசனால் தயாரிக்கப்பட இருந்தது, ஆனால் அது இப்போது செவன் ஸ்க்ரீன் ஸ்டுடியோக்கு மாறியுள்ளது.

இதில் SJ சூர்யா மற்றும் மிஷ்கின் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க, இளம் பாலிவுட் அழகி ஒருவர் கதாநாயகியாக நடிக்கவுள்ளதாக தெரிகிறது. அனிருத் ரவிச்சந்தர் இசையமைக்கவுள்ளார், விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Cinema News

Advertisement
 

Trending

 
Advertisement
To Top