Connect with us

ஜெயம் ரவி நடிப்பில் உருவான ‘சைரன்’ படத்தின் 2nd சிங்கிள் பாடல் வெளியானது..!!

Cinema News

ஜெயம் ரவி நடிப்பில் உருவான ‘சைரன்’ படத்தின் 2nd சிங்கிள் பாடல் வெளியானது..!!

ஜெயம்ரவி நடிப்பில் உருவாகி வரும் சைரன் படத்தின் 2nd சிங்கிள் பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது .

தமிழ் சினிமாவில் இருக்கும் பல முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்பவர் ஜெயம் ரவி. பல வித்தியாசமான கதாபாத்திங்களை விரும்பி ஏற்று நடிக்கும் இவரது படங்கள் அனைத்தும் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்துள்ளன .

அந்தவகையில் உலகம் முழுவதும் ஏகப்பட்ட ரசிகர்கள் பட்டாளத்தை வைத்திருக்கும் இவரது நடிப்பில் தற்போது உருவாகி உள்ள திரைப்படம் தான் “சைரன்” .

பிரம்மாண்டமாக உருவாகி வரும் இப்படத்தை இரும்புத்திரை, விஸ்வாசம், ஹீரோ உள்ளிட்ட படங்களில் எழுத்துப் பணியில் பங்காற்றிய ஆண்டனி பாக்யராஜ், இயக்கியுள்ளார்.

பிரமாண்ட பொருட்செலவில் தயாராகி வரும் இப்படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக நடிகை கீர்த்தி சுரேஷ் நடிக்க இவர்களுடன் பல இளம் முன்னணி நட்சத்திரங்கள் நடித்து வருகின்றனர் .

இந்நிலையில் இப்படம் குறித்த அடுத்தகட்ட அப்டேட் கேட்டு ரசிகர்கள் அன்பு தொல்லை செய்து வந்த நிலையில் சில நாட்களுக்கு முன் இப்படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு வெளியிட்டிருந்தது.

இதையடுத்து தற்போது இப்படத்தின் பாடல்களை படக்குழு ஒவ்வொன்றாக வெளியிட்டு வருகிறது அந்தவகையில் தற்போது இப்படத்தின் 2nd சிங்கிள் பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது .

அப்பா மகளின் பாசத்தை காட்டும் இந்த பாடல் வெளியாகி தற்போது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது . நீங்களும் கேட்டுவிட்டு எப்படி இருக்கிறது என்பதை கமென்டில் பகிருங்கள்..

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Cinema News

Advertisement
 

Trending

 
Advertisement
To Top