Connect with us

அரசியலில் எனது ஆதரவு விஜய்க்கு எப்போதும் கிடைக்காது – பிரபல தயாரிப்பாளர் அறிவிப்பு..!!

Cinema News

அரசியலில் எனது ஆதரவு விஜய்க்கு எப்போதும் கிடைக்காது – பிரபல தயாரிப்பாளர் அறிவிப்பு..!!

அரசியல் களத்தில் எனது ஆதரவு நடிகரும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய்க்கு இல்லை என என பிரபல தயாரிப்பாளர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

ஒரு நடிகராக பல வருடங்களாக தனது ரசிகர்களை வைத்து பல நலத்திட்ட உதவிகளை செய்து வந்த நடிகர் விஜய் ஒருவழியாக அதிகாரப்பூர்வமாக தனது அரசியல் கட்சியை அறிவித்துவிட்டார்.

தமிழக வெற்றிக் கழகம் என பெயரிடப்பட்டுள்ள இந்த கட்சியில் இணைவதற்காக ஒரு செயலி ஆரம்பிக்கப்பட்டு அதில் உறுப்பினராகலாம் என ஒரு காணொளி மூலம் விஜய் அறிவித்தார்.

அதன்படி விஜய் சொன்ன ஓரிரு நாட்களிலேயே அந்த செயலியில் சுமார் 50 லட்சத்துக்கும் அதிகமான நபர்கள் உறுப்பினர்களாக சேர்ந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்நிலையில் அரசியல் களத்தில் எனது ஆதரவு விஜய்க்கு இல்லை என விஷால் நடித்த ’மார்க் ஆண்டனி’ படத்தை தயாரித்த வினோத் தெரிவித்துள்ளார் .

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தியில் கூறிருப்பதாவது :

இதற்கு பிறகு நடிகர் விஜய் மீது நடிகராக மட்டுமே ஆதரவு, அரசியல் ரீதியாக ஆதரவு இல்லை. மேலும் அவரது அரசியல் குறித்து எனக்கு கவலையாக உள்ளது. புஸ்ஸி ஆனந்த் போன்ற நபர்களுடன் சேர்ந்து அவர் எதுவும் சாதிக்கப் போவதில்லை’ என்று தெறிவித்துள்ளார் .

தயாரிப்பாளர் வினோத்தின் இந்த பதிவுக்கு விஜய் ரசிகர்கள் தங்களது கண்டனத்தை கடுமையாக தெரிவித்து வருகின்றனர்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  என் திருமணத்தை பார்க்க உங்களுக்கு அவ்ளோ அவசரமா - நடிகை மாளவிகா மோகனன் செம கலாய்..!!

More in Cinema News

To Top