Connect with us

ஆனா கெட்ட பையன் சார் அந்த சின்ன பையன் – அரசியல் மேடையிலும் குட்டி ஸ்டோரி சொன்ன விஜய்..!!

Featured

ஆனா கெட்ட பையன் சார் அந்த சின்ன பையன் – அரசியல் மேடையிலும் குட்டி ஸ்டோரி சொன்ன விஜய்..!!

தமிழக வெற்றி கழகத்தின் முதல் மாநாடு இன்று பிரம்மாண்டமாக நடைபெற்ற நிலையில் அரசியல் மேடையிலும் விஜய் சொன்ன குட்டி ஸ்டோரி தற்போது செம வைரலாகி வருகிறது.

திரையுலகில் உச்சத்தில் இருந்து வந்த நடிகர் விஜய் தற்போது மக்கள் பணியாற்ற தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை ஆரம்பித்துள்ளார். இந்நிலையில் இக்கட்சியின் முதல் மாநாடு விக்ரவாண்டியில் படுபிரம்மாண்டமாக நடைபெற்றது.

லட்சக்கணக்கான தொண்டர்கள் முன் மாநாட்டில் கட்சி கொடியை ஏற்றி வைத்த விஜய் நேராக மேடைக்கு தனது கட்சியின் கொள்ளகைகளை விவரித்தார் . இதையடுத்து சினிமா மேடையில் மட்டும் இதுநாள் வரை குட்டி ஸ்டோரி சொன்ன விஜய் இன்று அரசியல் மேடையிலும் தனது குட்டி ஸ்டோரியை கூறியுள்ளது இணையத்தில் செம வைரலாக வலம் வருகிறது.

ஒரு நாட்டுல பெரிய போர் வந்துச்சாம், அந்த நாட்டுல பவர்புல்லான தலைவர் இல்லாததால… ஒரு பச்சப்புள்ள கையில தான் பொறுப்பு இருந்துச்சாம், அதனால் அந்த நாட்டுல இருந்த பெருந்தலைகளெல்லாம் பயந்துகிட்டு இருந்தாங்களாம். அந்த சின்ன பையன் அந்த நாட்டோட படைய நடத்துற பொறுப்ப ஏற்று போர்க்களம் போலாம் என சொன்னானா.. அப்போ அந்த பெரிய தலைகளெல்லாம் எப்பா நீயே சின்ன பையன் இது பெரிய போர்க்களம், அங்க பவர்புல்லான நெறைய எதிரிகளெல்லாம் இருப்பாங்க பா.. களத்துல அவங்கள சந்திக்குறது லா சாதாரணமான விஷயம் இல்ல… சொன்னா கேளு பா..

இது விளையாட்டு இல்ல, நீ பாட்டுக்கு குடுகுடுனு ஓடி விளையாடிட்டு திரும்ப வீட்டுக்கு ஓடி வரதுக்கு.. போர்னா படையை நடத்துனும் அதவிட முக்கியம் எதிரிகள சமாளிச்சு தாக்கு பிடிக்கணும் அதுக்கு மேல போர்ல ஜெயிக்கணும்.

உனக்கு துணை யாரும் இல்லாம நீ எப்படி பா போரை நடத்துவ? எப்படி ஜெயிப்ப? என பெருந்தலைகள் கேட்டபோது.. அதுக்கு பதில் சொல்லாம போருக்கு தனியா தன் படையோட போன அந்த பாண்டிய வம்சத்தை சேர்ந்த பையன் என்ன செஞ்சான்னு சங்க இலக்கியத்துல தெளிவா சொல்லி இருக்காங்க. படிக்காதவங்க படிச்சி தெரிஞ்சுகோங்க.. இல்லனா படிச்சவங்க கிட்ட கேட்டு தெரிஞ்சிகோங்க.. ஆனா கெட்ட பையன் சார் அந்த சின்ன பையன் என விஜய் தெரிவித்துள்ளார்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  மலேசியாவில் இத்தனை கோடிக்கு விற்பனையானதா 'ஜனநாயகன்'? ரெக்கார்ட் பிரேக் செய்த தளபதி விஜய்!

More in Featured

To Top