Connect with us

சஞ்சய்யின் படம் கைவிடப்பட்டதா? வெளிவந்த உண்மை..

Featured

சஞ்சய்யின் படம் கைவிடப்பட்டதா? வெளிவந்த உண்மை..

தளபதி விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமாகியுள்ளார். கடந்த 2023ம் ஆண்டு இதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டது. அதன் பிறகு, படத்தின் ஹீரோவாக சந்தீப் கிஷன் தேர்வு செய்யப்பட்டார்.

இந்த அறிவிப்பு வந்தபின், சென்னையில் படப்பிடிப்பு துவங்கியது. ஆனால், மூன்று நாட்கள் மட்டுமே படப்பிடிப்பு நடந்தது. இதனால், சஞ்சய் இயக்கத்தில் உருவாகும் படம் ட்ராப் ஆகிவிட்டது என பலராலும் பேசப்பட்டு வந்தது.

ஆனால், உண்மையில் அப்படி எதுவும் நடக்கவில்லை. முதற்கட்ட படப்பிடிப்பு சென்னையில் முடிந்த பிறகு, அடுத்தகட்ட படப்பிடிப்பு இலங்கையில் விரைவில் துவங்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அதன் ஏற்பாடுகள் தற்போது நடைபெறுவதாகவும் கூறப்படுகிறது.

லைகா நிறுவனத்திடம் ரூ. 25 கோடி பட்ஜெட்டுடன் இப்படம் First Copy அடிப்படையில் வாங்கப்பட்டுள்ளது. இதனால், படப்பிடிப்புக்கு எந்த தடையும் இல்லாதது. படத்தை கைவிடப்பட்டதாக வெளிவந்த தகவல்கள் உண்மையில்லை என்று பிரபல பத்திரிகையாளர் ஒருவர் கூறியுள்ளார்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Featured

To Top