Connect with us

நாயகனாகும் விஜய் சேதுபதியின் மகன்…ஆனால் அப்பா வழியில் கிடையாது..!

Cinema News

நாயகனாகும் விஜய் சேதுபதியின் மகன்…ஆனால் அப்பா வழியில் கிடையாது..!

நம்முடைய தமிழ் சினிமாவில் மிகவும் அதிகமாக ட்ரெண்ட் நடிகர் என்று சொல்லப்படுபவர் விஜய் சேதுபதி..மக்கள் செல்வன் விஜய் சேதுபதியின் மகன் சூர்யா சேதுபதி முதன் முதலில் நானும் ரவுடி தான் படத்தில் விஜய் சேதுபதியின் சிறு வயது கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்…இது தான் அவருக்கு அறிமுக திரைப்படமாகும்…இதனை தொடர்ந்து படங்கள் நடிக்க ஆர்வமாக இருப்பதாக நிறைய தகவல்கள் வந்து கொண்டே இருந்தது..

குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான இவர் மீண்டும் தனது தந்தையின் சிந்துபாத் திரைப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்…இப்படம் அந்த அளவு பெரிதாக இல்லை என்றும் சொல்லலாம்…இருந்தாலும் துரு துரு நடிப்பை அவர் கொடுத்து இருந்தார்..

இதன்பின் தற்போது வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி மற்றும் விஜய் சேதுபதி நடித்து வரும் விடுதலை 2 படத்தில் நடித்துள்ளார்…படப்பிடிப்பில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் கூட இணையத்தில் வெளிவந்தது…அவர் தான் பாகம் ரெண்டில் அதிகம் இருப்பாரா என நிறைய கேள்விகள் மக்களிடம் இருந்தது..

இந்நிலையில் சூர்யா சேதுபதி தற்போது புதிய படத்தில் ஹீரோவாக நடிக்க கமிட்டாகியுள்ளார்…அதாவது ஸ்டண்ட் மாஸ்டர் அனல் அரசு இயக்கத்தில் உருவாகும் Pheonix வீழான் எனும் திரைப்படத்தில் சூர்யா கதாநாயகனாக அறிமுகமாகிறார்…இந்த படம் ஆக்ஷன் நிறைந்த படம் என தெரிகின்றது..

மேலும் தரமான இசையமைப்பாளரான Sam c s இப்படத்திற்கு இசையமைக்கிறார்…இப்படத்தின் பூஜை இன்று நடந்துள்ளது..அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் வைரலாகி வருகின்றது..

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  150 கோடி வசூலை கடந்தது பிருத்வி ராஜின் ஆடு ஜீவிதம் திரைப்படம்..!!!

More in Cinema News

To Top