Connect with us

“93 வயது Cowboy கிளிண்ட் ஈஸ்ட்வுட்டின் போட்டோ பகிர்ந்து ஜிகர்தண்டா Double X இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் Tweet!”

Cinema News

“93 வயது Cowboy கிளிண்ட் ஈஸ்ட்வுட்டின் போட்டோ பகிர்ந்து ஜிகர்தண்டா Double X இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் Tweet!”

ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தில் ராகவா லாரன்ஸ் கிளிண்ட் ஈஸ்ட்வுட்டின் ரசிகராகவே நடித்திருப்பார். மேலும், தியேட்டர் ஸ்க்ரீனில் டோர் அமைத்துக் கொண்டு கிளிண்ட் ஈஸ்ட்வுட் போலவே வந்து தனது எதிரியை பழிவாங்கும் காட்சிகள் நிறைந்திருக்கும்.

F-d9IxDbcAAjWkK

இந்த படமே கிளிண்ட் ஈஸ்ட்வுட்டுக்கு சமர்ப்பணம் என கார்த்திக் சுப்புராஜ் தேங்ஸ் நோட் எல்லாம் போட்டிருந்தார். இயக்குநராக 1971ம் ஆண்டு அறிமுகமாகி பல கவ்பாய் ஸ்டைல் படங்களில் நடித்து ஒட்டுமொத்த ஹாலிவுட்டையும் வியக்க வைத்தவர் கிளிண்ட் ஈஸ்ட்வுட்.

எ ஃபிஸ்ட்ஃபுல் ஆஃப் டாலர்ஸ், தி குட் தி பேட் அண்ட் தி அக்லி, தி விட்சஸ், ஃபயர் ஃபாக்ஸ், சிட்டி ஹீட், மில்லியன் டாலர் பேபி, அமெரிக்கன் ஸ்னைபர் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். இந்த வயதிலும் அவர் புதிய படத்திற்காக ஷூட்டிங் சென்ற நிலையில், வெளியான புகைப்படம் உலகளவில் டிரெண்டாகி வருகிறது.

ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் திரைப்படத்தில் கிளிண்ட் ஈஸ்ட்வுட் மேலக்குயில்குடியில் ஷூட்டிங் நடத்தியது போல திரைக்கதை அமைக்கப்பட்டு இருக்கும்.

இந்நிலையில், கிளிண்ட் ஈஸ்ட்வுட்டின் சமீபத்திய ஷுட்டிங் புகைப்படத்தை ஷேர் செய்த கார்த்திக் சுப்புராஜ் மேலக்குயில்குடிக்கு ஷூட்டிங் வர ஐடியா இருக்கா சாரே என ட்வீட் போட்டுள்ளார். மேலும், தங்கள் ஆசியுடன் ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் 3வது வாரத்தில் வெற்றிநடை போடுகிறது என்றும் பதிவிட்டுள்ளார்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  கமல்ஹாசனின் 'தக்லைஃப்' படத்தில் நடிகர் சிம்பு - இணையத்தை கலக்கும் டக்கர் புகைப்படம்..!!

More in Cinema News

To Top