Connect with us

‘ஜெயிலர் 2’ படத்தில் விஜய் சேதுபதி: ரஜினியுடன் மீண்டும் சிறப்பு இணைப்பு

Cinema News

‘ஜெயிலர் 2’ படத்தில் விஜய் சேதுபதி: ரஜினியுடன் மீண்டும் சிறப்பு இணைப்பு

ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் ‘ஜெயிலர் 2’ படத்தில் நடிகர் விஜய் சேதுபதி கேமியோ ரோலில் நடித்துள்ளார் என்பது அதிகாரப்பூர்வமாக உறுதியாகியுள்ளது. கோவாவில் நடைபெற்ற முக்கியமான படப்பிடிப்பு கட்டத்தில் அவர் படக்குழுவில் இணைந்ததாகவும், ரஜினிகாந்த் மீது கொண்ட மரியாதை மற்றும் அன்பு காரணமாகவே இந்த சிறப்பு வேடத்தை ஏற்றுக்கொண்டதாகவும் விஜய் சேதுபதி தெரிவித்துள்ளார்.

‘பேட்ட’ படத்திற்குப் பிறகு மீண்டும் இருவரும் இணைவது ரசிகர்களுக்கு ஒரு பெரிய சர்ப்ரைஸாக அமைந்துள்ளது. ஏற்கனவே பாலய்யா, மோகன்லால், சிவராஜ்குமார், எஸ்.ஜே.சூர்யா, ஃபஹத் பாசில் போன்ற பல முன்னணி நடிகர்கள் நடித்துள்ள நிலையில், விஜய் சேதுபதி இணைப்பு படத்தின் முக்கியத்துவத்தை மேலும் உயர்த்தியுள்ளது. இந்த கேமியோ ரோல் கதையின் திருப்புமுனையாக இருக்கும் என கூறப்படுவதால், ‘ஜெயிலர் 2’ படம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை பெற்றுள்ளது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Cinema News

Advertisement
 

Trending

 
Advertisement
To Top