Connect with us

தனது மகனுக்காக மன்னிப்பு கேட்ட விஜய் சேதுபதி – காரணம் இதுதான்!

Featured

தனது மகனுக்காக மன்னிப்பு கேட்ட விஜய் சேதுபதி – காரணம் இதுதான்!

நடிகர் விஜய் சேதுபதி கடந்த ஆண்டு ‘மகாராஜா’ மற்றும் ‘விடுதலை 2’ ஆகிய வெற்றிப் படங்களை வழங்கி ரசிகர்களின் மனதை கவர்ந்திருந்தார். தற்போது, அவர் நடிப்பில் உருவாகியுள்ள ‘தலைவன் தலைவி’ திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிந்துள்ளது. இந்தப் படம், இயக்குநர் பாண்டிராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ளது. இதில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நித்யா மேனன் நடித்துள்ளார். சமீபத்தில் இப்படத்தின் பாடல்கள் வெளியானது. இதனால் ரசிகர்கள் மத்தியில் படத்திற்கான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

இதே நேரத்தில், விஜய் சேதுபதியின் மகனான சூர்யா சேதுபதி, அனல் அரசு இயக்கத்தில் ‘பீனிக்ஸ்’ என்ற படத்தில் ஹீரோவாக நடித்துள்ளார். இந்த படம் ஜூலை 4ஆம் தேதி, அதாவது நாளை திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்த நிலையில், ‘பீனிக்ஸ்’ பட விளம்பர விழாக்களில் கலந்து கொண்ட சூர்யா சேதுபதி, பேசிய சில காணொளிகள் சமூக வலைதளங்களில் பரவி வருகின்றன. அவை அவரது பேச்சை விமர்சிக்கும் விதமாக இருந்ததாகவும், சிலரை அவரது தரப்பினர் அழைத்து அந்த வீடியோக்களை நீக்குமாறு கூறி மிரட்டியதாகவும் புகார்கள் எழுந்துள்ளன.

இதுகுறித்து விஜய் சேதுபதியிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர், “தம்பிகள் தெரியாமல் பண்ணிருப்பாங்க. எங்கள் தரப்பில் இருந்து யாருக்கேனும் அழைப்பு வந்து மிரட்டல் நடந்திருந்தால், அதற்காக நான் மன்னிப்பு கேட்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  வடிவேலு, பகத் பாசில் நடித்த ‘மாரீசன்’ படத்தின் கதை இதுதானா?

More in Featured

To Top