Connect with us

7 நாட்களில் ‘மார்கன்’ உலகளவில் செய்த வசூல் வெளியானது! எவ்வளவு தெரியுமா?

Featured

7 நாட்களில் ‘மார்கன்’ உலகளவில் செய்த வசூல் வெளியானது! எவ்வளவு தெரியுமா?

கடந்த வாரம் வெளியான திரைப்படங்களில், மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்ற திரைப்படமாக மார்கன் உள்ளதாக கூறப்படுகிறது.

விஜய் ஆண்டனி இந்த படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார். குற்றத்தையும் திரில்லரையும் மையமாகக் கொண்டு உருவான இந்த திரைப்படத்தை அறிமுக இயக்குனர் லியோ ஜான் பால் இயக்கியுள்ளார்.

இந்தப் படத்தில் விஜய் ஆண்டனியுடன் இணைந்து அஜய், சமுத்திரக்கனி, தீப்ஷிகா, ப்ரகிடா ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மார்கன் திரைப்படம் தற்போது 7 நாட்கள் நிறைவடைந்து, வெற்றிகரமாக பாக்ஸ் ஆபிஸில் ஓடிக் கொண்டு இருக்கிறது.

இந்நிலையில், இந்த 7 நாட்களில் உலகளவில் மார்கன் திரைப்படம் பெற்றுள்ள மொத்த வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, மார்கன் திரைப்படம் உலகம் முழுவதும் 7 நாட்களில் ரூ.6.1 கோடி வரை வசூலித்துள்ளது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Featured

Advertisement
 

Trending

 
Advertisement
To Top