Connect with us

SK-வின் அயலான் படத்தின் `சூரோ சூரோ’ பாடல் வெளியானது..!!

Cinema News

SK-வின் அயலான் படத்தின் `சூரோ சூரோ’ பாடல் வெளியானது..!!

SK-வின் நடிப்பில் குதூகலமாக உருவாகி உள்ள அயலான் படத்தின் `சூரோ சூரோ’ பாடல் வெளியாகி தற்போது நல்ல வரவேற்பை பெற்று வருகிறது .

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் சிவகார்த்திகேயன் . வித்தியாச படங்களுக்கு பெயர் போன நடிகராக விளங்கும் இவரது நடிப்பில் ரவிக்குமார் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகி உள்ள திரைப்படம் தான் ‘அயலான்’ .

இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ரகுல் ப்ரீத் சிங் நடிக்க இவர்களுடன் யோகி பாபு , கருணாகரன் , பால சரவணன் ,பானுபிரியா உள்பட பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.

இசை புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ள இப்படத்தின் பாடல்கள் அடுத்தடுத்து வெளியாகி வரும் நிலையில் தற்போது இப்படத்தின் அடுத்த பாடலான `சூரோ சூரோ’ பாடல் வெளியாகி உள்ளது.

இதுவரை எத்தனையோ சூப்பர் ஹிட் பாடல்களை கொடுத்துள்ள நம்ப இசை புயல் அயலான் படத்திலும் பல நல்ல பாடல்களை கொடுத்துள்ள அதிலும் குறிப்பாக இந்த படத்தின் பாடல்கள் குழந்தைகளுக்கு பிடிக்கும் வகையில் அமைந்துள்ளது.

மாபெரும் பொருட் செலவில் பிரம்மாண்டமாக உருவான இப்படம் பல பிரச்சனைகளை சந்தித்து நீண்ட நாட்களாக திரைக்கு வரமுடியாமல் இருந்த நிலையில் ஒருவழியாக இப்படம் பொங்கல் பண்டிகைக்கு வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  சொந்த மண்ணில் மீண்டெழுமா லக்னோ..? மும்பை அணியுடன் இன்று பலப்பரீட்சை..!!

More in Cinema News

To Top