Connect with us

🔥 விஜய்–சங்கீதா விவகாரம்: ஜீவனாம்சம் கோரி புதிய மனு… நீலாங்கரை வீட்டில் தங்க அனுமதி கேட்ட சங்கீதா!

Cinema News

🔥 விஜய்–சங்கீதா விவகாரம்: ஜீவனாம்சம் கோரி புதிய மனு… நீலாங்கரை வீட்டில் தங்க அனுமதி கேட்ட சங்கீதா!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஜய் மற்றும் அவரது மனைவி சங்கீதா சொர்ணலிங்கம் தொடர்பான குடும்ப விவகாரம் தற்போது புதிய திருப்பத்தை எடுத்து மீண்டும் பரபரப்பாக பேசப்படுகிறது. சமீபத்தில், சங்கீதா செங்கல்பட்டு குடும்ப நீதிமன்றத்தில் புதிய மனு தாக்கல் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அந்த மனுவில், விஜய் அதிக வருமானம் பெறும் நிலையில் இருப்பதால் தன்னுக்கும் குழந்தைகளுக்கும் நியாயமான ஜீவனாம்சம் (maintenance) வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும், சென்னை நீலாங்கரை பகுதியில் உள்ள வீட்டில் தங்க அனுமதி வழங்க வேண்டும் என்றும் நீதிமன்றத்தில் அவர் வேண்டுகோள் வைத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

குறிப்பாக, அந்த வீட்டில் 50 சதவீத உரிமை தமக்கே சொந்தம் எனவும் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதற்கு முன்பாகவே சங்கீதா திருமண வாழ்க்கையில் ஏற்பட்ட பிரச்சினைகளை காரணமாகக் கொண்டு விவாகரத்து மனுவும் தாக்கல் செய்திருந்ததாக தகவல்கள் வெளியாகியிருந்தன. தற்போது இந்த புதிய மனு தாக்கல் செய்யப்பட்டிருப்பது இந்த வழக்கில் மேலும் கவனத்தை ஈர்த்துள்ளது. இந்த வழக்கின் அடுத்த கட்ட விசாரணை தேதி விரைவில் நிர்ணயிக்கப்பட உள்ள நிலையில், நடிகர் விஜயின் தனிப்பட்ட வாழ்க்கை தொடர்பான இந்த விவகாரம் சமூக வலைத்தளங்களிலும் ரசிகர்கள் மத்தியிலும் தீவிரமாக பேசப்பட்டு வருகிறது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Cinema News

Advertisement
 

Trending

 
Advertisement
To Top