Connect with us

தயாரிப்பாளர் வீட்டு விஷேஷம்…விஜய் வந்து கொடுத்த Mass Entry!

Cinema News

தயாரிப்பாளர் வீட்டு விஷேஷம்…விஜய் வந்து கொடுத்த Mass Entry!

நடிகர் விஜய்யின் லியோ திரைப்படம் கடந்த மாதம் 19ம் தேதி ரிலீஸானது…லோகேஷ் கனகராஜ் இயக்கிய இந்தப் படத்தை விஜய்யின் உறவினர் லலித் குமார் தயாரித்திருந்தார்…இந்த படம் நிறைய லாபத்தை தந்தது…

ஏற்கனவே விஜய்யின் மாஸ்டர் படத்தையும் லலித் குமார் தயாரித்திருந்தது குறிப்பிடத்தக்கது. மாஸ்டர், லியோ தவிர மகான், காத்துவாக்குல ரெண்டு காதல், கோப்ரா உள்ளிட்ட படங்களையும் தயாரித்துள்ளார்…அதனால் பெரிய தயாரிப்பாளர் இடத்தை இவர் பிடித்து இருக்கின்றார்…

7 ஸ்க்ரீன் ஸ்டுடியோ லலித் குமார் விஜய்யின் நெருங்கிய உறவினர் என்பது குறிப்பிடத்தக்கது.குறுகிய காலத்திலேயே பிரம்மாண்டமான தயாரிப்பு நிறுவனமாக மாஸ் காட்டி வருகிறது செவன் ஸ்க்ரீன் ஸ்டூடியோ.

இந்நிலையில் தயாரிப்பாளர் லலித் குமாரின் மகன் திருமண வரவேற்பு நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது…அதுவும் மிக பிரம்மாண்டமாக நடந்து வந்தது..

இந்த திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் தளபதி விஜய்யும் கலந்துகொண்டார் மணமக்களுடன் விஜய் எடுத்துக்கொண்ட போட்டோவை ரசிகர்கள் அதிகளவில் ஷேர் செய்து வருகின்றனர்…மனுஷன் நண்பர்களை விட்டு கொடுக்காதவர் என அனைவரும் சொல்லி அவரை கொண்டாடி வருகின்றனர்…

தளபதி 68 பட பூஜையில் விஜய்யின் கெட்டப் வித்தியாசமாக இருந்தது.ஆனால் லலித் குமார் மகன் திருமண வரவேற்பில் ரொம்பவும் நார்மலாக இருந்தார்..

மணமக்கள் அருகே மேடையில் நின்றபடி ரசிகர்களை நோக்கி கை அசைத்து அவர்களையும் குஷி படுத்தினார் அதனால் அனைவரும் இதனை ட்ரெண்ட் செய்து வருகின்றனர்…

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  சிவகார்த்திகேயன் தயாரிக்கும் குரங்கு பெடல் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு..!!!

More in Cinema News

To Top