Connect with us

விஜய் ஆண்டனி நடிப்பில் உருவான ‘ஹிட்லர்’ படத்தின் டீசர் வெளியீடு..!!

Cinema News

விஜய் ஆண்டனி நடிப்பில் உருவான ‘ஹிட்லர்’ படத்தின் டீசர் வெளியீடு..!!

விஜய் ஆண்டனி நடிப்பில் உருவாகி உள்ள ‘ஹிட்லர்’ படத்தின் டீசர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

இசையமைப்பாளர் , நடிகர், இயக்குநர், தயாரிப்பாளர் என பல திறமைகளை தனக்குள் கொண்டுள்ளவர் விஜய் ஆண்டனி , தனித்துவமான கதைகளை தேர்ந்துஎடுத்து நடித்து வரும் இவரது நடிப்பில் தற்போது ரிலீசுக்கு தயாராகியுள்ள படம் தான் ஹிட்லர்.

இயக்குநர் தனா இயக்கியுள்ள இப்படத்தில் விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக ரியா சுமன் நடிக்கிறார் மேலும் இவர்களுடன் இயக்குநரும், நடிகருமான கௌதம் வாசுதேவ் மேனன் உள்பட பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்துள்ளனர் .

தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளில் பான் இந்திய படமாக உருவாகியுள்ள இப்படத்தை செந்தூர் பிலிம் இண்டர்நேஷனல் தயாரித்துள்ளது.ரசிகர்கள் மத்தியில் மிக பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இப்படம் குறித்து ரசிகர்கள் தொடர்ந்து அப்டேட் கேட்டு வந்த நிலையில் தற்போது இப்படத்தின் டீசரை வெளியிட்டு ரசிகர்களும் ட்ரீட் கொடுத்துள்ளது.

காட்சிக்கு காட்சி திக் திக் என சீட்டின் நுனியில் அமரவைக்கும் வகையில் உருவாகி உள்ள இப்படத்தின் டீசரை நீங்களும் பாருங்கள்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Cinema News

Advertisement
 

Trending

 
Advertisement
To Top