Connect with us

அரசியலில் என்ட்ரியா? நடிகர் விஜய் ஆண்டனியின் நேரடியான பதில்!

Featured

அரசியலில் என்ட்ரியா? நடிகர் விஜய் ஆண்டனியின் நேரடியான பதில்!

இசையமைப்பாளர், தயாரிப்பாளர், நடிகர் என பன்முகத் திறமையுள்ள விஜய் ஆண்டனி தமிழ் சினிமாவில் தனி இடத்தைப் பெற்றவர். சுக்கிரன் படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமான இவர், தொடர்ந்து நான் அவன் இல்லை, காதலில் விழுந்தேன், வேலாயுதம், வேட்டைக்காரன் போன்ற பல படங்களில் பணியாற்றி வருகிறார். தனக்கென ஒரு தனித்துவமான பாணியை உருவாக்கி, பல படங்களில் ஹிட் ஆல்பங்கள் வழங்கியுள்ளார்.

இசையமைப்பாளராக மட்டுமின்றி, ‘நான்’ படத்தின் மூலம் கதாநாயகனாகவும் விஜய் ஆண்டனி அறிமுகமாகினார். அதன்பின் சலீம், பிச்சைக்காரன் உள்ளிட்ட ஹிட் படங்களை வழங்கி வருகிறார். இதற்கு பின்னர், மதுரையில் நடைபெற்ற பட விழாவில் நடிகர் விஜய் ஆண்டனி அரசியல் குறித்த கருத்துக்களைப் பகிர்ந்துள்ளதன் மூலம் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

அப்போது, “பிரபலம் ஆகிவிட்டேன் என்பதற்காக நான் அரசியலுக்கு வர முடியாது. எனக்கு அரசியல் அறிவு இல்லை. தற்போது 50 வயது ஆகிவிட்டது. இனிமேல் அரசியல் பற்றி தெரிந்து கொள்ள ஆர்வம் இல்லை. மக்களுக்கு நல்லது செய்ய அரசியல் வடிவில் செய்யும் எண்ணமும் இல்லை” என்று விஜய் ஆண்டனி தெரிவித்துள்ளார்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Featured

To Top