Connect with us

போதைப் பொருள் வழக்கில் சிக்கிய நடிகர் ஸ்ரீகாந்த்… மகனுக்காக இப்படியெல்லாம் செய்தாரா?

Featured

போதைப் பொருள் வழக்கில் சிக்கிய நடிகர் ஸ்ரீகாந்த்… மகனுக்காக இப்படியெல்லாம் செய்தாரா?

தற்போது தமிழ் சினிமா உலகில் பரபரப்பை ஏற்படுத்தியிருப்பவர் நடிகர் ஸ்ரீகாந்த். போதைப்பொருள் பயன்படுத்திய விவகாரத்தில் தற்போது அவர் சிக்கியுள்ளார். இதற்கு முன்பு பல அரசியல் பிரமுகர்களும் இதே விவகாரத்தில் சிக்கியிருந்த நிலையில், இப்போது நடிகர் ஸ்ரீகாந்தும் அதே வழியில் உள்ளார்.

அவரிடம் நடத்தப்பட்ட மருத்துவ பரிசோதனையில், அவர் போதைப்பொருள் பயன்படுத்தியிருப்பது உறுதியாகியுள்ளது. இதனைத் தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவருடன் தொடர்பில் இருந்தவர்கள் யார்? போதைப்பொருள் மற்றவர்களிடம் உள்ளதா? என போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். ஜாமின் கோரிக்கையுடன் நீதிமன்றத்தில் முறையிட்ட ஸ்ரீகாந்த், தனது குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்சனை மற்றும் மகனை கவனிக்க வேண்டிய தேவையை காரணமாக காட்டியுள்ளார். அவர் தனது மகன் ஆஹில் மீது மிகுந்த பாசம் வைத்திருக்கிறார்.

ஆஹில் சினிமாவை விட விளையாட்டில் அதிக ஆர்வம் கொண்டவர் என தெரிய வருகிறது. பல்வேறு விளையாட்டு போட்டிகளில் பங்கேற்று பல பரிசுகளையும் வென்றுள்ளார். இதற்கெல்லாம் தந்தையாக ஸ்ரீகாந்த் முழு ஆதரவையும் வழங்கி வந்துள்ளார். மகனின் போட்டிகளில் முதல் நபராக சென்று ஊக்கமளித்து வந்ததாக அவரது நெருங்கியவர்கள் கூறுகின்றனர்.

மகனும் தனது தந்தையை நெருங்கிய நண்பர் என கருதி வந்துள்ளார். இந்நிலையில் ஸ்ரீகாந்த் இவ்வாறான பிரச்சனையில் சிக்கியிருப்பது, அவரது குடும்பத்தினருக்கு மிகுந்த மன உளைச்சலை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  சமூக வலைத்தளத்தை அதிரவைத்த பூஜா ஹெக்டே ‘மோனிகா’ பாடல்..

More in Featured

To Top