Connect with us

அனுமதியின்றி பயன்படுத்தப்படும் வேள்பாரி காட்சிகள் – எச்சரிக்கை விடுத்த இயக்குநர் சங்கர்..!!

Cinema News

அனுமதியின்றி பயன்படுத்தப்படும் வேள்பாரி காட்சிகள் – எச்சரிக்கை விடுத்த இயக்குநர் சங்கர்..!!

தான் காப்புரிமை வாங்கி வைத்துள்ள வேள்பாரி நாவலில் இருக்கும் காட்சிகளை உரிய அனுமதியின்றி திரைப்படங்களில் பயன்படுத்தப்பட்டு வருவதாக இயக்குநர் ஷங்கர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து இயக்குநர் ஷங்கர் வெளியிட்டுள்ள காரசார செய்தியில் கூறிருப்பதாவது :

சு.வெங்கடேசனின் ‘நவயுக நாயகன் வேள்பாரி’ நாவலின் பதிப்புரிமை வைத்திருக்கும் நான், அதிலுள்ள பல முக்கிய காட்சிகள் எந்த அனுமதியும் பெறப்படாமல் பல படங்களில் இடம்பெறுவதை கண்டு கலங்கியுள்ளேன்

சமீபத்தில் வெளியான ஒரு ட்ரைலரில், இந்நாவலின் முக்கிய காட்சி பயன்படுத்தப்பட்டிருப்பது மிகவும் வேதனை தருகிறது.

திரைப்படங்கள் அல்லது வெப்சீரிஸ் எந்த ஊடகத்திலும் இந்நாவலின் காட்சிகளைப் பயன்படுத்துவதை தயவுசெய்து தவிர்க்கவும், படைப்பாளிகளின் உரிமைகளை மதிக்கவும்! உரிமை மீறி காட்சிகளை பயன்படுத்தினால் சட்ட ரீதியான நடவடிக்கையை எதிர்கொள்ள நேரும் என இயக்குநர் ஷங்கர் வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  திரையரங்குகளை விட்டு OTTக்கு வரும் விஜய்யின் தி கோட் திரைப்படம் - வெளியானது அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!!

More in Cinema News

To Top