Connect with us

வள்ளிமயில் ஒரு கூட்டமான கதை…நிறைய விஷயங்கள் இருக்கின்றது – இயக்குனர் சுசீந்திரன் தகவல்!

Cinema News

வள்ளிமயில் ஒரு கூட்டமான கதை…நிறைய விஷயங்கள் இருக்கின்றது – இயக்குனர் சுசீந்திரன் தகவல்!

சுசீந்திரன் இயக்கத்தில் முதல் முறையாக விஜய் ஆண்டனி, ஃபரியா அப்துல்லா நடித்துள்ள படம் தான் வள்ளி மயில்…இப்படத்தின் ட்ரைலர் கூட சமீபத்திக் வந்து வைரலாக பேசப்பட்டது..

நல்லுசாமி பிக்சர்ஸ் சார்பில் தயாரிப்பாளர் தாய் சரவணன் தயாரித்துள்ள இந்தப் படத்தில் பாரதிராஜா,மனோஜ் பாரதிராஜா,சத்யராஜ் உட்பட பலர் நடிக்கின்றனர்…இப்படத்திற்கு டி.இமான் இசையமைக்கிறார்…பாஸ்கர் சக்தி வசனம் எழுதியுள்ளார் விஜய் சக்ரவர்த்தி ஒளிப்பதிவு செய்கிறார்.80களின் நாடகக்கலை பின்னணியில் உருவாகியுள்ளது…

இயக்குநர் சுசீந்தீரன் இப்படத்தை பற்றி சொல்லும்போது இந்தப் படம் கிரைம் திரில்லராக ஆரம்பித்த படம்…வில்லனைப் பின்னணியாகக் கொண்டு கதை நடக்கும் சத்யராஜ் முக்கியமான ரோல் அவரைச் சுற்றி 4 பேர் அப்படி ஒரு வகையில் கதை நகரும்…அதே போல் விஜய் ஆண்டனியை சுற்றி 4 பேர் எனப் பெரிய கூட்டம் படத்தில் இருக்கும் மிகச் சிக்கலான கதை அதை எளிமையாகச் சொல்ல முயன்றுள்ளோம் என்றார்…கண்டிப்பாக இது உங்களை ரசிக்க வைக்கும் ஒரு படமாகும்…

அதனை தொடர்ந்து நடிகர் சத்யராஜ் பேசும்போது நாம் நடிக்கும் படங்களில் நம் கொள்கைகள் பற்றி பேச முடியாது….நம்முடைய வேலையை பார்க்க வந்துள்ளோம் அதை மட்டும் செய்ய வேண்டும் எனச் செய்துவிட்டுப் போவோம்…சில படங்களில் மட்டும்தான் அந்தக் கொள்கைகளோடு சேர்ந்த கதாபாத்திரம் கிடைக்கும் அந்த வகையில் இந்தப் படம் அமைந்ததில் மகிழ்ச்சி….

அதனை போல இந்த படம் மிகவும் சிறப்பாக வந்து இருப்பதாகவும் அவர் சொல்லி இருக்கின்றார் சத்யராஜ்,அதனை போல விஜய் ஆண்டனியின் நடிப்பு சிறப்பாக இருக்கும் என்றும் சொல்லி இருக்கின்றார் சத்யராஜ்…இந்த தகவல் வைரல் ஆகி வருகின்றது…

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  100 கோடி வசூலை கடந்தது ஃபஹத் ஃபாசிலின் ‘ஆவேஷம்’ திரைப்படம்..!!!

More in Cinema News

To Top