Connect with us

என் மீது பழி… அது உண்மைக்கு புறம்பானது… நான் என்ன செய்வது? – நெத்தியடி அடித்த வைரமுத்து..

Featured

என் மீது பழி… அது உண்மைக்கு புறம்பானது… நான் என்ன செய்வது? – நெத்தியடி அடித்த வைரமுத்து..

பாடலாசிரியர் வைரமுத்து, இந்திய திரையுலகில் தவிர்க்க முடியாத ஒரு முக்கியமான பெயர். ஏழு முறை தேசிய விருது பெற்றுள்ள இவர், இன்றும் இளம் பாடலாசிரியர்களுக்கு போட்டியாகத் திகழ்கிறார். இதையொட்டிய பேச்சாக, கடந்த சில ஆண்டுகளாக அவர் வழக்கம்போல் அதிக வாய்ப்புகளை பெறவில்லை என்பதும் திரையுலகத்தில் வட்டாரமாக பேசப்பட்டுவந்துள்ளது.

இந்நிலையில், வைரமுத்து தனது எக்ஸ் (முன்னாள் ட்விட்டர்) தளத்தில் வெளியிட்ட பதிவு தற்போது இணையத்தில் டிரெண்டாகியுள்ளது. இந்த பதிவில், பாடல்களில் திருத்தம் மேற்கொள்வதில் தாம் ஒத்துழைக்க மறுப்பதாக எழும் குற்றச்சாட்டுகளுக்கு விளக்கம் அளித்துள்ளார். நிழல்கள் படத்தில் “இது ஒரு பொன் மாலைப் பொழுது” என்ற பாடலை எழுதி திரைப்பாடலாசிரியராக அறிமுகமான வைரமுத்து, அந்தப் பாடலால் திரையுலகில் பெரும் வரவேற்பைப் பெற்றார். இதனூடாக இளையராஜா இசையமைப்பில் தொடர்ந்து பணியாற்றும் வாய்ப்பையும் பெற்றார். இளையராஜா – வைரமுத்து கூட்டணியாக ஏராளமான கிளாசிக் பாடல்களை வழங்கி, இசை ரசிகர்களின் மனதில் நிலைத்து நிறைந்தனர்.

அந்த கூட்டணி பின்னர் சில காரணங்களால் முடிவுக்கு வந்தது. சுமார் 30 ஆண்டுகளுக்குப் பிறகு அவர்கள் தனித்தனியாக பயணிக்கத் தொடங்கினர். இளையராஜாவுக்குப் பிறகு ஏ.ஆர். ரஹ்மான் உள்ளிட்ட பல இசையமைப்பாளர்களுடன் வைரமுத்து பணியாற்றினார். ரஹ்மான்-வைரமுத்து கூட்டணியும் மிகச் சிறப்பான பல ஹிட் பாடல்களை வழங்கியது. ஆனால், சமீபத்திய காலங்களில் இந்த கூட்டணியும் தொடரவில்லை.

தனது சமூக வலைதளப் பதிவில், வைரமுத்து கூறியுள்ளதாவது: என்மீது ஒரு பழி உண்டு. பாடல்களில் திருத்தம் கேட்டால் செய்யமாட்டேன் என்று கூறப்படுவது முற்றிலும் உண்மைக்குப் புறம்பானது. திருத்தத்திற்கு ஒரு கருத்தமைதி வேண்டும். இருந்தால், உடனே ஒத்துக்கொள்கிறேன். மாற்றியும் கொடுத்திருக்கிறேன்.” இதற்கு எடுத்துக்காட்டாக, ‘புன்னகை மன்னன்’ படத்தில் இடம்பெற்ற “வான் மேகம் பூப்பூவாய்த் தூவும்” என்ற பாடலை குறிப்பிட்டுள்ளார். அந்தப் பாடலில்,

“மழைத்துளி தெறித்தது
எனக்குள்ளே குளித்தது
நினைத்தது பலித்தது
உயிர்த்தலம் சிலிர்த்தது”

என எழுதியிருந்ததாகவும், இதில் ‘உயிர்த்தலம்’ என்ற சொல்லை மாற்றுமாறு இசையமைப்பாளர் கேட்டதாகவும் கூறினார். அதற்கான காரணமாக,

“அந்த சொல்லை பெண்ணுறுப்புடன் தொடர்புபடுத்தி சிலர் பிரச்சனை செய்யக் கூடும்” என்றது.
அதையடுத்து, அவர் அந்த வரியை “நினைத்தது பலித்தது, குடைக்கம்பி துளிர்த்தது” என மாற்றியதாக தெரிவித்துள்ளார். இதேபோல், ‘மனிதன்’ படத்தில் “வானத்தைப் பார்த்தேன், பூமியைப் பார்த்தேன்” என்ற பாடலில்,

“குரங்கிலிருந்து பிறந்தானா?
குரங்கை மனிதன் பெற்றானா?
யாரைக் கேள்வி கேட்பது?
டார்வின் இல்லையே!”

என எழுதியிருந்ததாகவும், இதில் “டார்வின்” என்ற சொல்லை மாற்றுமாறு இயக்குநர் எஸ்.பி. முத்துராமனின் உதவியாளர் கேட்டதாகவும் கூறியுள்ளார். அதற்குப் பதிலாக,

See also  ரசிகர்கள் காத்திருந்த குபேரா OTT ரிலீஸ் தேதி அறிவிப்பு..

“தெரிந்ததை மட்டும் சொல்வதல்ல பாட்டு; தெரியாததைச் சொல்லிக் கொடுப்பதும் பாட்டு” என்று மாற்ற மறுத்ததாகவும் விளக்கியுள்ளார். இதை இயக்குநரிடம் கூறியதையடுத்து, அவர் இதற்கும் மேலாக வற்புறுத்த வேண்டாம் என விலகிக் கொண்டதாகவும் கூறினார். தன் பதிவின் முடிவில், வைரமுத்து கூறியுள்ளார்:

“இப்படி நியாயமான நேரங்களில் மாற்ற மறுத்திருக்கிறேன்.
பாட்டுவரியின் திருத்தத்தை, பொருளமைதியே தீர்மானிக்கிறது – நானல்ல.
ஆனால் பழி என் மீதே வருகிறது.
என்ன செய்ய?”
இந்த பதிவு, அவரது ரசிகர்களிடையே பெரும் விவாதத்தை கிளப்பி உள்ளது. அவரின் எழுத்து பாணியும், திருத்தத்திற்கான அணுகுமுறையும் மீண்டும் ஒரு முறை கவனம் ஈர்த்துள்ளது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Featured

To Top