Connect with us

இது அறிந்தே செய்யும் அநீதி – கவிதையால் கடுமையாக விமர்சித்த வைரமுத்து..!!

Cinema News

இது அறிந்தே செய்யும் அநீதி – கவிதையால் கடுமையாக விமர்சித்த வைரமுத்து..!!

மத்திய அரசின் நிதிநிலை அறிக்கையில் உரிமையும் நியாயமும் தேவையும் உள்ள தமிழ்நாடு போகிற போக்கில் புறக்கணிக்கப்பட்டிருக்கிறது. இது அறிந்தே செய்யும் அநீதி என கவிஞர் வைரமுத்து கடுமையாக விமர்சித்துள்ளார்.

இதுகுறித்து கவிஞர் வைரமுத்து கவிநயத்துடன் வெளியிட்டுள்ள செய்தியில் கூறிருப்பதாவது :

மத்திய அரசின் நிதிநிலை அறிக்கையில் உரிமையும் நியாயமும் தேவையும் உள்ள தமிழ்நாடு போகிற போக்கில் புறக்கணிக்கப்பட்டிருக்கிறது. இது அறிந்தே செய்யும் அநீதி. தனக்கு எதிராகக் குடைபிடித்தவனுக்கும் சேர்த்தே பொழிவதுதான் மழையின் மாண்பு. மழை மாண்பு தவறிவிட்டது.

நிதிநிலை அறிக்கையில் குறள் ஒன்று கூறுவது எழுதாத மரபு. இவ்வாண்டு விடுபட்டுள்ளது. எழுத வேண்டிய குறள் என்ன தெரியுமா? பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் நூலோர் தொகுத்தவற்றுள் எல்லாம் தலை என கவிஞர் வைரமுத்து வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Cinema News

To Top